போர்ச்சுகலில் மலை உச்சியில் இருந்து ‘செல்ஃபி’ எடுக்க ஆசைப்பட்ட
தம்பதியினர் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர். அவர்களது
குழந்தைகள் பெற்றோரை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது குழந்தைகளுடன் போர்ச்சுகலில் உள்ள கபோ டி ரோகா மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை அவர்கள் மலையின் உச்சியில் இருந்து ‘செல்ஃபி’ எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை தாங்களே செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சித்தனர். அப்போது தம்பதியினர் எதிர்பாராத விதமாக மலையில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அட்லாண்டிக் கடலில் விழுந்துவிட்டனர். உடனடியாக மீட்பு குழுவினர் வந்து அவர்களை தேட முயற்சி செய்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களது சடலங்கள் கடந்த திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இருவரும் தவறி விழுந்த போது அவர்களுடன் இருந்த இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனர். பெற்றோரை இழந்த சோகத்தில் குழந்தைகள் பரிதவித்தன. அவர்கள் போலந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த மலையில் அந்நாட்டு சுற்றுலாத்துறை சார்பில் பாதுகாப்பு
தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தம்பதியினர் அந்த தடுப்பையும் தாண்டி
சென்று ‘செல்ஃபி’ எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அப்போதுதான் இந்த சம்பவம்
நடந்துள்ளது.