உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மீரட் மாவட்டம் கார்காவ்தா பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கிராம தலைவர் நவாப் கான் மற்றும் சிலரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. பின்னர் அவர் முசாபர் நகரில் வைக்கப்பட்டுள்ளார். இளம்பெண் அங்கிருந்து தப்பி ஒடிவந்துள்ளார். அவர் பேசுகையில் தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் கொடுத்த புகாரின்படி நவாப் கான் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பெண்கள் மதமாற்றம் செய்ய உதவியாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் மத உணர்வுகளை காயப்படுத்துதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இளம்பெண் கடந்த ஜூலை 30ம் தேதி கடத்தப்பட்டுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர், பெண் கடத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நேற்று போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய அவர்கள் போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான மருத்துவ அறிக்கைக்கு போலீசார் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த பாரதீய ஜனதா கட்சியினர் அப்பகுதிக்கு சென்றனர். கட்சியின் எம்.பி. அகர்வால் இப்பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி அரசு இது மதக்கலவரத்தை தூண்டிவிடும் முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில அரசியல் கட்சிகள் இதற்கு மதவாத சாயத்தை பூச முயற்சி செய்தன. ஆனால் அது வெற்றியடையவில்லை.” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் நரேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.