மாடல் அழகி கற்பழிப்பு புகாரில் குற்றம் சுமத்தப்பட்ட டி.ஜி.பி.சுனில்
பரஸ்கருக்கு முன்ஜாமீன் அளித்து மும்பை சிறப்பு மகளிர் கோர்ட்டு
உத்தரவிட்டது.
கற்பழிப்பு புகார்
மும்பை மல்வானி போலீசில் கடந்த மாதம் 23–ந் தேதி 25 வயது மாடல் அழகி ஒருவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில், போலீஸ் டி.ஜி.பி.சுனில் பரஸ்கர் தன்னை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கற்பழித்து விட்டதாக கூறி இருந்தார். இதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டை டி.ஜி.பி.சுனில் பரஸ்கர் மறுத்தார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில், மாடல் அழகி செயல்படுவதாக கூறினார். மேலும், தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மும்பை சிறப்பு மகளிர் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.
முன்ஜாமீன்
இந்த வழக்கு நீதிபதி வர்ஷாலி ஜோஷி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜராகிய வக்கீல், சுனில் பரஸ்கர் மீது மாடல் அழகி கூறும் புகார் உண்மைக்கு புறம்பானது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த புகாரை பொறுத்தவரை டி.ஜி.பி.சுனில் பரஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது’ என்று உத்தரவு பிறப்பித்தார்.