கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி முழுவதும் கொச்சியில் இருந்தார்கள். அன்று ஏப்ரல் முதல் தினம் என்பதால் யுவராஜ் , ஹர்பஜன் , நெஹ்ரா போன்ற வீரர்கள் கங்குலியை ஏமாற்ற நினைத்துள்ளார்கள். அதற்க்காக ஒரு செய்திதாளை ஏற்பாடு செய்துள்ளார்கள். அதில் கங்குலி யுவராஜ், ஹர்பஜன் , சேவாக் பற்றி தவறாக கூறி இருப்பதாக இருந்தது.
இதனை பார்த்த கங்குலிக்கு கடும் அதிர்ச்சி. இது குறித்து அந்த வீரர்கள் அணி மேலாளரிடம் புகார் செய்தார்கள். ஆனால் கங்குலி தான் அவ்வாறு செய்யவில்லை தன்னை நம்புமாறு கூறி கொண்டு இருந்தார். ஆனால் யாரும் நம்பவில்லை. கங்குலிக்கு ஆதரவாக யாரும் இல்லை. அவரது கண்களில் தண்ணீர் வரும் நிலைக்கு சென்றுவிட்டார். கங்குலி தனது கேப்டன் பதவியை தனது ராஜினாமா செய்வதாக கூறினார். ஆனால் டிராவிட்டால் இதற்கு மேல் கங்குலி கவலை படுவதை பொருக்க முடியவில்லை. அது ஒரு ஏப்ரல் ஃபூல் என்னும் உண்மையை சொல்லிவிட்டார்.
அவ்வளவு தான் டிரஸிங் ரூம் நிலை மாறியது. கங்குலி தனது பேட்டை எடுத்துக் கொண்டு அனைத்து வீரர்களையும் துரத்த ஆரம்பித்து விட்டார். இதை இன்று நினைத்து கூட சிரித்துக் கொண்டு இருப்பார் யுவராஜ் சிங்.