உலகமே இப்போது செல்பிக்கு மாறி வருகிறது. எங்கு பார்த்தாலும் ஒரே செல்பி மோகம் தான். உலகி உள்ள போட்டோகிராபர்களுக்கு எல்லாம் வேலை இல்லாத நிலைக்கு சென்று விடுவார்கள் போல. இதன் உச்சக்கட்ட சம்பவம் ஒன்று போர்ச்சுகலில் நடந்து உள்ளது. போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள பிரபல சுற்றுலா தலமான லிஸ்பன் அருகேயுள்ளது கபோ டே ரோகா. இங்கு மலை குன்றை ஒட்டி, அட்லான்டிக் கடல் அமைந்துள்ளது.
இந்த பகுதிக்கு தங்களது ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகளுடன் போர்ச்சுக்கல் தம்பதி ஒன்று வந்துள்ளது. குழந்தைகளை ஓரமாக நிற்க செய்துவிட்டு மலை குன்றின் உச்சியில் நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளது அந்த தம்பதி. பின்பக்கம் இருந்த கடலும் சேர்ந்து படத்தில் விழ வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சிபகுதிக்கே வந்த அந்த கணவனும், மனைவியும், குழந்தைகள் கண் எதிரிலேயே கடலில் விழுந்தனர். அவர்களது சடலங்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.