BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 3 August 2014

பிரபாகரன ராஜீவ் காந்தியை ஏமாற்றி விட்டார்

தமிழர் பிரச்சினையை தவறாக கையாண்டதால் கொலை செய்யப்பட்டார்… ராஜீவ் மீது நட்வர்சிங் குற்றச்சாட்டு

அமைச்சரவையுடன் ஆலோசனை நடத்தாமல், இலங்கைக்கு படைகளை அனுப்பினார், இலங்கை பிரச்சினையை தவறாக கையாண்டர், அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து பரபரப்புத் தகவல்களை தெரிவித்துள்ளார் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்.

காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்பட்டவர் 83 வயது நட்வர் சிங். இவர் கடந்த 2008-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார். ஒரு வாழ்க்கை போதாது’ என்ற தலைப்பில் தனது சுய சரிதையையை இன்று வெளியிட உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமராவதை, ராகும் தடுத்ததாக பரபரப்புத் தகவலைத் தெரிவித்திருந்தார். மேலும், தான் சுயசரிதை எழுதப்போகும் விவரமறிந்து சோனியா தரப்பு, இது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகக் கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், தான் சுயசரிதை எழுதினால் உண்மை வெளிவரும் என சோனியா பேட்டியளித்தார்.
இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை குறித்து பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார் நட்வர் சிங். அப்பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-
  • தவறான அணுகுமுறை…
பிரபாகரனை சந்தித்தார்…அவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ரகசியமாக சந்தித்தார். ராஜீவ் காந்தி, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி அல்ல. அவர் பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன் அவரை ஏமாற்றி விட்டார்.


  • ஆலோசிக்கவில்லை…
மத்திய அமைச்சரவையுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே, இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை ராஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். ஆனால் இலங்கையில் செய்ய வேண்டிய பணி குறித்து இந்திய அமைதிப்படை எந்தவகையிலும் தயாராகவில்லை.



  • வேறுபட்ட கொள்கைகள்...
மேலும், இலங்கை பிரச்சினை பற்றிய இந்திய கொள்கையில் இணக்கம் இல்லை. அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டுக்கென ஒரு கொள்கையை வைத்திருந்தார். மத்திய அரசு தனக்கென ஒரு கொள்கையை வைத்திருந்தது’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த நட்வர்சிங்?
  • இந்திய வெளியுறவுத் துறையில் 30 ஆண்டுகாலம் அதிகாரியாக பணியாற்றியவர் நட்வர்சிங்.
  • சீனா, அமெரிக்கா மற்றும் யுனிசெப் ஆகியவற்றில் முக்கிய பணிகளுக்கு அதிகாரியாக செயல்பட்டவர் நட்வர்.
  • 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் கீழ் பிரதமர் அலுவலக பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அன்று முதல் இந்திரா குடும்பத்துக்கு நெருங்கிய நபராக உருவெடுத்தார்.
  • 1984ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலராக பணியாற்றிய நிலையில் தமது அரசு பணியை ராஜினாமா செய்தார் நட்வர்சிங்.
  • 1984ஆம் ஆண்டு நட்வர்சிங்குக்கு மத்தியாரசு பத்மபூஷண் விருது அளித்தது.
  • 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தார்.
  • 1985-க்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் நட்வர்சிங் உருவெடுத்தார்.
  • 1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.டி. திவாரி, அர்ஜூன்சிங் ஆகியோருடன் சேர்ந்து அனைத்திந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) என்ற தனிக்கட்சியை நடத்தினார்.
  • 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சோனியா கை ஓங்கிய பின்னரே மீண்டும் காங்கிரஸில் இணைந்தார் நட்வர்சிங்.
  • 1998- 99 ஆம் ஆண்டு 12வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் நட்வர்சிங்.
  • 2002ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் நட்வர்சிங்.
  • 2004ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்த போது வெளியுறவுத் துறை அமைச்சரானார் நட்வர்சிங்.
  • 2005ஆம் ஆண்டு ஈராக்குக்கு உணவு, மருந்துக்கு எண்ணெய் என்ற ஐ.நா. திட்டத்தில் நடந்த ஊழலில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்தார் நட்வர்சிங்.
  • 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் இருந்தும் நட்வர்சிங் நீக்கப்பட 2008ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.
  • பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அக்கட்சியிலும் இருந்து நட்வர்சிங் நீக்கப்பட்டார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies