உக்ரைன் நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு தருவதோடு, அவர்களுக்கு ஆயுதங்களும் போர்ப்பயிற்சியும் செய்வதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டிய அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது.
இந்த பொருளாதார தடைக்கு போலந்து நாடு எடுத்த முயற்சியே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. போலந்து நாட்டு அதிபர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் கலந்து பேசி இந்த பொருளாதார தடைக்கு வழிவகை செய்தார்.
இதனால் ரஷ்யா போலந்து மீது கடும் ஆத்திரம் கொண்டது. இதற்கு பதிலடியாக போலந்து நாட்டில் இருந்து இறக்குமதியாகும் காய்கறி மற்றும் பழங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
ஏராளமான பூச்சிக்கொல்லி மிச்சங்களும், நைட்ரேட் ரசாயனங்களும் போலந்து நாட்டில் உற்பத்தியாகும் காய்கறி மற்றும் பழங்களில் இருப்பதாக குற்றம் சாட்டிய ரஷ்ய, சுகாதார அதிகாரிகள் இந்த தடையை விதித்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஒரு பில்லியன் யூரோ மதிப்புள்ள ஆப்பிள்கள் போலந்து நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ரஷ்யா விதித்துள்ள தடையால் அந்நாட்டு ஆப்பிள் வணிகம் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.