BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 3 August 2014

சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!…

பெய்ஜிங்:-சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சாவோடாங் நகரம் லூதியன் பகுதியில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். நேற்று மாலை அங்கு கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

கியாவோஜியா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்கு இருந்தவர்கள் வெளியே ஓடினர். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நில நடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

ரிக்டர் கருவியில் 6.5 அளவு நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 180 பேர் பலியாகி விட்டதாகவும் 1300 காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 381 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies