இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்களை எதிர்த்து நடைபெற்ற அறவழிப்
போராட்டம் 1942ம் ஆண்டு தீவிரம் அடைந்தது. அப்போது, பிரிட்டிஷாரின் காலனி
அரசை பணிய வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நோக்கத்துடன், வெள்ளையனே
வெளியேறு இயக்கம் என்ற ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து இந்த இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் இந்த இயக்கத்தின் முதற்கட்ட பணி, ஜூலை 1942ல் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழுவில் தொடங்கியது.
அதன்பின்னர் ஆகஸ்ட் 8-ம் தேதி பம்பாயில் (தற்போதைய மும்பை) இந்திய தேசிய காங்கிரசின் மொநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்தை வலியுறுத்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதனை ஒடுக்க நினைத்த பிரிட்டிஷ் படை, மறுநாள் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை சிறைப்பிடித்தது. ஓராண்டுக்குள் இந்த இயக்கத்தையும் ஒடுக்கி விட்டது. ஆனால், இந்த இயக்கம் ஆரம்பித்தபிறகுதான், விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது சுதந்திரத்திற்கு வித்திட்டது.
இதே ஆகஸ்ட் 8-ம் தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
• 1848 - மாத்தளை கிளர்ச்சியின்போது, இலங்கையில் பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.
• 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, டென்னசியின் இராணுவ ஆளுநர் ஆண்ட்ரூ ஜோன்சன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆப்பிரிக்க அமெரிக்கர்களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.
• 1947 - பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
• 1940 - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் திலிப் சர்தேசாய் பிறந்த நாள். இவர் 30 டெஸ்ட் போட்டிகளிலும், 179 முதல்தர போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
• 1989 - ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா ஓடத்தை விண்ணுக்கு அனுப்பியது.