BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 8 August 2014

25 ரூபாய் போதும், ‘குளு குளு’ ஏசியில் படம் பார்க்கலாம்… : டிசம்பரில் வருகிறது ‘அம்மா’ தியேட்டர்கள்!

ன்றைய தேதியில் ஒரு தியேட்டருக்கு நாலுபேர் சேர்ந்தாற்போல் படம் பார்க்கப் போனால் குறைந்தது 1000 ரூபாயாவது அழ வேண்டியிருக்கும்.
அடிப்படை வசதிகள் இல்லாத தியேட்டர்களுக்கு போனால் கூட 500 வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதுபோக சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்களை தருவதில்லை. இதனால் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகின்றனர்.

விட்டால் சினிமாத் தொழிலே நசிந்து விடும் போல என்று தயாரிப்பாளர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் தான் தமிழகத்தில் விரைவில் குறைந்த கட்டணத்தில் படம் பார்க்கக் கூடிய வகையில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
தற்போது அது செயல் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தபடி பயன்பாடு இல்லாத மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த திரையரங்குகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 மண்டலங்களில் 15 அம்மா தியேட்டர்கள் முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது. நுங்கம்பாக்கம், ராயபுரம், மிண்ட், அண்ணா நகர், துறைமுகம், மதுரவாயல், பெருங்குடி ஆகிய பகுதிகளில் அம்மா தியேட்டர் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இடங்கள் தேர்வு செய்து தியேட்டர் அமைப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்படுகிறது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் அம்மா தியேட்டர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தியேட்டர்களில் யு சான்றிதழ் தமிழ் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். மேலும் தியேட்டர்களில் குளு குளு வசதியும் செய்யப்படுகிறது. புதிய திரைப்படங்களை பார்க்கும் வகையில் நவீன ஒலி பெருக்கி சாதனங்கள் அமைக்கப்படுகின்றன.

பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பொழுது போக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. திரைப்பட கட்டணமாக ரூ.25–க்கும் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies