ஜெட் ஏர்வேக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் இருந்து பிரசெல்ஸ் சென்றது. விமானம் அங்காரா வான்பகுதியில் சென்றபோது சுமார் 5000 அடி விரைவாக கிழே இறங்கியுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க விமானபோக்குவரத்து இயக்குநகரம் இரண்டு விமானிகளுக்கும் சம்மன் அனுப்பியது. அதற்கு விமானி தூங்கி விட்டதாகவும், பெண் விமானி டேப்லெட்டில் பிசியாக இருந்ததாகவும் பொருப்பற்ற பதில் கூறியுள்ளார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க கூறியுள்ளது.