இந்தோனிஷாயாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு தம்பதியினர் தங்கி இருந்தனர். அவர்கள் அறையை காலி செய்யும் போது ஒரு பெரிய சூட்கேஸை கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் ஓட்டல் நிர்வாகத்தினர்களிடம் இந்த சூட்கேஸில் விலைமதிப்புள்ள பொருட்கள் இருப்பதாகவும், இதை சிறிது நேரம் கவனமாக பார்த்துக்கொள்ளும்படியும், தாங்கள் சில நிமிடங்களில் மீண்டும் வந்து இந்த சூட்கேஸை எடுத்துக்கொண்டு செல்வதாகவும் கூறிவிட்டு சென்றனர்.
ஆனால் பல மணிநேரம் ஆகியும் அந்த தம்பதிகள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் சூட்கேஸின் கவரை பிரித்து பார்த்தபோது அதன்மேல் ரத்தக்கறை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அதனை திறந்து பார்த்த போது 60 வயது மிக்க ஒரு பெண்ணின் பிணம் நிர்வாணமாக இருந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.