சென்னையில் கடந்த 5-ந் தேதியன்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,655-க்கும், பவுன்
ரூ.21,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் கிராமுக்கு ரூ.20-ம்,
பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2,675-க்கும், பவுன்
ரூ.21,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலை
தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,699-க்கும், பவுன் ரூ.21,592-க்கும் விற்பனையாகியது. நேற்று மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.28-ம், பவுனுக்கு ரூ.224-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 2,727-க்கும், பவுன் ரூ.21,816-க்கும் விற்பனையாகியது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.576 உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் 47 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ 44,245-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு 20 காசும், கிலோவுக்கு ரூ.115-ம் உயர்ந்து ஒரு கிராம் 47 ரூபாய் 50 காசுக்கும், கிலோ ரூ.44,360-க்கும் வெள்ளி விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை ஏற்றம் குறித்து தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது.
இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதே நிலை தொடருமானால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.