கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திட்டக்குடி பள்ளியில் 7ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு மாணவிகள் திடீரென காணாமல் போனார்கள். அவர்களின் செல்போன் தொடர்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார், மாணவிகளை மீட்டனர். விசாரணையில் அவர்கள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்த பாதிரியார் மற்றும் அவர்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த சங்கிலித் தொடர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்ற நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் இன்று 5 பெண்கள் உளபட மேலும் 7 பேரைக் கைது செய்துள்ளனர்.