பெங்களூரில் மகளின் காதலனை ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்தார். அவரது
உடலை சாக்கு மூட்டையில் கட்டி போலீஸ் நிலையத்திற்கு ஸ்கூட்டரில் எடுத்து
சென்று போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவியுடன் காதல்
பெங்களூர் அருகே கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேவசந்திரா, ஜே.சி.லே–அவுட்டில் வசித்து வருபவர் ரியாஸ்கான், ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் சபானா(14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
சித்தாபுராவில் வசித்து வந்தவர் சாதிக் பாட்ஷா(வயது 22). சபானாவுக்கும் சாதிக் பாட்ஷாவுக்கும், காதல் அரும்பியது. இதுபற்றி ரியாஸ்கானுக்கு தெரிந்ததும், தனது மகளை அவர் கண்டித்தார்.
மாயம்
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 30–ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சபானா, அதன்பிறகு திரும்பி வரவில்லை. தனது மகளை ரியாஸ்கான் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை காணவில்லை என்று கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2–ந் தேதி ரியாஸ்கான் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரியாஸ்கானின் மகளை தேடிவந்தனர். இந்த நிலையில், காணாமல் போனதாக தேடப்பட்ட சபானா, தனது காதலன் சாதிக் பாட்ஷாவுடன் ஓடி விட்டது தெரியவந்தது. இதுபற்றி கேள்விப்பட்டதும் ரியாஸ்கான் அதிர்ச்சி அடைந்தார்.
சமாதான பேச்சு
மேலும் சாதிக் பாட்ஷாவின் வீட்டிற்கு சென்று, அவருடைய சகோதரரை சந்தித்து ரியாஸ்கான் பேசினார். அப்போது சமாதானமாக செல்வது குறித்து பேசுவதற்காக பன்னரகட்டா அருகே கொண்ட தேவனஹள்ளியில் வசிக்கும் தன்னுடைய சகோதரி வீட்டிற்கு சாதிக் பாட்ஷா, அவரது சகோதரரை வரும்படி ரியாஸ்கான் தெரிவித்தார். அதன்படி, நேற்று இரவு சாதிக் பாட்ஷா, அவரது குடும்பத்தினர் ரியாஸ்கானின் சகோதரி வீட்டிற்கு சென்றார்கள்.
அப்போது ரியாஸ்கானுக்கும், சாதிக் பாட்ஷாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. இதையடுத்து, அங்கிருந்த குடும்பத்தினர் காலையில் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று ரியாஸ்கானிடம் தெரிவித்தனர். இதற்கு ரியாஸ்கான் சம்மதம் தெரிவித்தார். பின்னர் ரியாஸ்கானின் சகோதரி வீட்டிலேயே சாதிக் பாட்ஷா, அவரது குடும்பத்தினர் மற்றும் ரியாஸ்கானும் அங்கேயே படுத்து தூங்கி விட்டார்கள்.
வெட்டிக் கொலை
காலை 6 மணியளவில் சாதிக் பாட்ஷாவிடம் தனியாக பேச வேண்டும் என்று வீட்டில் இருந்து சிறிது தூரத்திற்கு ரியாஸ்கான் அழைத்து சென்றார். அங்கு வைத்தும் அவர்களுக்குள் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த ரியாஸ்கான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக சாதிக் பாட்ஷாவை வெட்டியதாக தெரிகிறது.
இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த சாதிக் பாட்ஷா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தார். பின்னர் சாதிக் பாட்ஷாவின் உடலை ஒரு சாக்கு மூட்டைக்குள் போட்டு ரியாஸ்கான் திணித்தார். அந்த சாக்கு மூட்டையை தனது ஸ்கூட்டரில் வைத்து கொண்டு பன்னரகட்டாவில் இருந்து கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்திற்கு ரியாஸ்கான் சென்றார்.
போலீசில் சரண்
போலீஸ் நிலையம் முன்பு ரத்த கறையுடன் கூடிய சாக்கு மூட்டையை ஸ்கூட்டரில் இருந்து ரியாஸ்கான் கீழே இறக்கி போட்டார். பின்னர் தனது மகளின் காதலனை வெட்டிக் கொலை செய்தது பற்றியும், போலீசில் சரண் அடைய வந்திருப்பதாகவும் கே.ஆர்.புரம் போலீசாரிடம் ரியாஸ்கான் கூறினார். இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை போலீசார் கைது செய்தார்கள். அதன்பிறகு, சாதிக் பாட்ஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரபரப்பு
இதற்கிடையில், கொலை நடந்த இடம் பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், இந்த வழக்கை பன்னரகட்டாவுக்கு கே.ஆர்.புரம் போலீசார் மாற்றினார்கள். ரியாஸ்கானும் பன்னரகட்டா போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது