மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ரேனுகா ஷிண்டே மற்றும் சீமா காவிட் ஆகிய இருவரும் எந்நேரத்திலும் தூக்கில் இடப்படலாம் என அவர்கள் குடும்பத்தினருக்கு செய்தி வந்துள்ளது . இவர்களின் கருணை மனு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நிராகரித்தப் பின் இந்த செய்தி வெளிவந்துள்ளது .
சகோதரிகள் இருவரும் 1990 முதல் 1996 ஆண்டுக்குள் 13 குழந்தைகளை கடத்தியுள்ளனர் . அவர்கள் இருவரும் 13 பேரைக் கடத்தி அவர்களை பிச்சை எடுக்க வைத்து , பின்பு அவர்கள் வளர்ந்த பின்னர் தலையில் அடித்து கொன்றுள்ளனர் .
இவர்களுக்கு 2001 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது .