ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது.
ரஜினியும் படத்தில் கதாநாயகியாக வரும் சோனாக்சி சின்ஹாவும் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது.
பிறகு ஐதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்தது. ரஜினியுடன் படத்தின் இன்னொரு நாயகியான அனுஷ்கா நடித்த காட்சிகளை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அங்கு படமாக்கினார்.
படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழுந்ததாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் பரவின. இதனை ரவிக்குமார் மறுத்தார். ரஜினி நலமுடன் இருக்கிறார் என்று கூறினார்.
படப்பிடிப்பு முடிந்து ரஜினியும் படக்குழுவினரும் சென்னை திரும்பினர். ‘லிங்கா’வின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மங்களூரில் நடக்கிறது. இதையடுத்து ஒரு வாரம் ஓய்வுக்கு பிறகு நேற்று ரஜினி மங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
மங்களூர் விமான நிலையம் வந்து இறங்கிய அவரை காண பெரும் கூட்டம் கூடியது. ரஜினியிடம் நிருபர்கள் ‘லிங்கா’ படம் எப்போது ரிலீசாகும் என கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினி, ‘டிசம்பர் 12–ந்தேதி என் பிறந்த நாளில் ‘லிங்கா’ படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். ‘லிங்கா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஷிமோகோவில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளவே இங்கு வந்தேன்’ என்றார்.
உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, ‘கடவுள் அருளால் நான் நலமாக இருக்கிறேன். நன்றி’ என்றார்.