‘காதல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சந்தியா. இப்படத்தைத் தொடர்ந்து
‘டிஷ்யூம்’, ‘கூடல் நகர்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ ஆகிய படங்களில் நடித்தார்.
அதன்பிறகு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் தமிழில் நடிக்காமல்
இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சந்தானத்தோடு ஜோடி சேர்ந்து
‘யா யா’ படத்தில் நடித்தார்.
தற்போது இரா சரவணன் இயக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தில் நடிக்கிறார். இதில் நரேன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே என்ற மும்பைப் பெண் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சூரி, சந்தியா மற்றும் இயக்குனர் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். அருள்தேவ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் சந்தியா, சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அருள்தேவ் இசையில் ஒரு குத்துப்பாட்டுக்கு சூரியுடன் ஆட்டம் போட்டுள்ளார். இதுவரை குத்துப்பாட்டு ஆடாமல் இருந்த சந்தியா கத்துக்குட்டி மூலம் குத்தாட்டத்திலும் செம ஆட்டம் போட்டுள்ளாராம். மேலும் இவருடன் ஆட தயங்கிய சூரியிடம், உங்களுக்கு டான்ஸ் நன்றாக வருகிறது. அதனால் தயங்காமல் ஆடுங்கள் என சந்தியா கூறியதும் சூரி உற்சாகத்தில் டான்ஸ் ஆடினாராம்.