சென்னையில் பஸ் வழித்தடங்களின் அடிப்படையில் வெவ்வேறு கல்லூரிகளை
சேர்ந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்
கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் மாணவர்களே தங்களுக்குள் 2
கோஷ்டிகளாக பிரிந்து பயங்கர மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியது.
இந்த மோதலில் வானகரத்தை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமிஷனர் ஜோஸ் தங்கையா ஆகியோரது மேற்பார்வையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
மோதல் நடைபெற்ற போது சந்தேகத்துக்கிடமாக கல்லூரி வளாகத்தில் திரிந்த மாணவர்களை போலீசார் போட்டோ எடுத்து வைத்திருந்தினர். வெட்டுப்பட்ட மாணவர் சதீசிடம் இதனை காட்டி விசாரித்தனர். அப்போது அவர் சூழ்ந்து நின்று தாக்கிய 7 மாணவர்களை அடையாளம் காட்டினார்.
இதில் செங்குன்றம் புதூரை சேர்ந்த மோகன் (20) என்ற மாணவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இவரை தேடி போலீசார் வீட்டுக்கு சென்ற போது தப்பி ஓடினார். அவரை விரட்டிச் சென்று போலீசார் பிடித்தனர். மோகனிடமிருந்து கத்தி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பி.ஏ. 3–ம் ஆண்டு மாணவரான மோகன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மோகனின் குடும்பம் மிகவும் வறுமையானது. தந்தை சங்கர் மினி வேன் டிரைவராக உள்ளார்.
4–ம் வகுப்பு படிக்கும் போதே தாயை இழந்து இவரை, பாட்டிதான் வளர்த்துள்ளார். இவருக்கு பிளஸ் – 2 முடித்த ஒரு தங்கையும் உள்ளார்.
இப்படி குடும்ப சூழ்நிலையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோகனைப் போன்று பல மாணவர்கள் தவறான வழிகளில் செல்வதாக போலீசார் கூறினார்கள்.
தலைமறைவாக இருக்கும் 6 மாணவர்களும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். கல்லூரியில் நடைபெற்ற மோதல் சம்பவத்துக்கு பின்னர், இந்த 6 மாணவர்களும் தங்களது வீடுகளுக்கு செல்லாமல் வெளியில் தங்கியுள்ளனர்.
இவர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார் அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர். இவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர் தினகரன், சப் –இன்ஸ்பெக்டர் எழில் வேந்தன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மோகனும் அவனது நண்பர்களும் திருவள்ளூர் பகுதியில் இருந்து வருபவர்கள். வெட்டுப்பட்ட சதீஷ் பூந்தமல்லியில் இருந்து வருபவர்.
பஸ் வழித்தடத்தின் அடிப்படையிலேயே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துவந்துள்ளது. இதன் காரணமாகவே கடந்த வாரம் பூந்தமல்லியில் வைத்து சதீசின் நண்பரான மாணவர் ஒருவரும் வெட்டப்பட்டார்.
ஆனால் அப்போது அவர் புகார் எதுவும் கொடுக்காமல் கீழே விழுந்து விட்டேன் என்று போலீசிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.