சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் 'லிட்டில் இந்தியா' பகுதியில்
கடந்த வரும் டிசம்பர் மாதம் 8-ந்தேதி பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் 54
போலீசார் காயம் அடைந்தனர். 23 அவசர கால வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சிங்கப்பூர் அரசு இது சம்பந்தமாக பல இந்தியர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. அவர்களுக்கு படிப்படியாக கோர்ட் தண்டனை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று 42 வயதான சாமியப்பன் செல்லதுரை என்ற இந்தியருக்கு கோர்ட் 25 மாத தண்டனை வழங்கியுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக இவரை போலீசார் தேடிவந்தனர். டிசம்பர் 15-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து இந்தியா தப்பி வர முயன்றபோது விமான நிலையத்தில் வைத்து போலீசார் இவரை கைது செய்தனர். இதற்கு முன்னர் 5 பேர் இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர். இவர் 6-வது நபர் ஆவார்.
டிசம்பர் 8-ந்தேதி நடைபெற்ற கலவரத்தின்போது கலவரத்தை தூண்டி விட்டதாகவும், கான்கிரீட் பலகையை உடைத்து வீசியதாகவும் சாமியப்பன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.