10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார் , 40 வயதான ஜோ பாவே . இவர் பிரிட்டேனைச் சேர்ந்தவர் . இதில் தங்கம் வென்றதன் மூலம் யுரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியில் , அதிக வயதில் தங்கம் வென்ற பெண் என்ற சாதனையை செய்தார் .
இவருக்கு ஜக்கப் என்ற 4 வயது பையனும் , எமிலி என்னும் 11 மாத குழந்தையும் உள்ளார்கள் .
இது குறித்து அவர் கூறுகையில் , " இதை என்னால் நம்ப முடியவில்லை , நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை . பல ஆண்டுகளாக நான் வெற்றி பெற முயற்சித்து வந்தாலும் , 40 வயதில் தான் வெல்ல முடிந்தது . இது எனக்கு சிரிப்பை வரவைக்கிறது . இப்போது தான் நான் அதை எப்படி முடிக்க வேண்டும் என்று கற்றுள்ளேன் " என்றார் .