கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.
அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆக ஆட்டம் பாட்டம் எனக் கலகலப்பாகத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் ராணவ், ரயான், மஞ்சரி முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் இணைந்தனர். மொத்தமாக 24 பேரில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் மிட் வீக் எவிக்ஷனில் ஜாக்குலின் வெளியேற, பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான், சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள்.
பவித்ரா, ரயான், பவித்ரா, விஷால் வெளியேறினர். இதையடுத்து வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறார். வெற்றி மேடையில் பேசிய முத்து, "வெற்றிப் பெற்றப் பணத்தை வைத்து வீட்டுக் கடன் அடைக்க வேண்டும். என்னோட இரண்டு நண்பர்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்யவேண்டும். நா. முத்துக்குமாரின் 'அணில் ஆடும் முன்றில்', 'வேடிக்கைப் பார்ப்பவன்' உள்ளிட்ட புத்தகங்களை சிறைச்சாலைக்கு வழங்க வேண்டும்" என்றார்.
வெற்றிக் கோப்பையுடன் பேசிய முத்து, "என் அம்மாதான் இந்த வெற்றிக்குக் காரணம். எங்க அம்மா எனக்கு உழைக்கச் சொல்லிக் கொடுத்தாங்க. யாராவது தப்பு செஞ்சா தட்டிக் கேளு; அதே தப்ப நீயே செஞ்சா திருத்திக்கச் சொல்லிக் கொடுத்தாங்க. அதைத்தான் பிக்பாஸ் விட்டுல செஞ்சேன்
உழைப்புதான் என் வெற்றிக்குக் காரணம். என்னாலயே வெற்றி பெற முடியும்னா உங்க எல்லார்னாலையும் முடியும். இதுதான் நான் உங்களுக்குச் சொல்ல நினைப்பது. இந்த வெற்றியைக் கொடுத்த எல்லாருக்கும் நன்றி" என்றார் பெரும் மகிழ்ச்சியுடன்.