கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.
அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆக ஆட்டம் பாட்டம் எனக் கலகலப்பாகத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் ராணவ், ரயான், மஞ்சரி முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் இணைந்தனர்.
மொத்தமாக 24 பேரில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் மிட் வீக் எவிக்ஷனில் ஜாக்குலின் வெளியேற, பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள்.
இதில் ரயான், பவித்ரா அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி மூன்று போட்டியாளர்களாக முத்து, சவுந்தர்யா, விஷால் இருந்தனர். மூன்றாவது ஆளாக விஷாலும் வெளியேறினார். இதையடுத்து விஜய் சேதுபதி வெற்றிக் கோப்பையை அறிவிக்க ஆயத்தமாக அரங்கமே படபடப்புடன் இருந்தது. இந்த சீசனின் வெற்றிக் கோப்பை முத்துக் குமரன் தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை சவுந்தர்யா பிடித்திருக்கிறார்.