BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 19 December 2024

Chennai IFF Awards: அசத்திய `அமரன்’, `மகாராஜா’ ; சிறந்த படம்..? - விருதாளர்களின் முழுப் பட்டியல்

2024ம் ஆண்டுக்கான 22வது சென்னை சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று (டிச 19) இரவு சென்னையில் நடைபெற்றது.

தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் நடத்தப்படும் இவ்விழா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றிருந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தது. விருதுகள் பெற்ற திரைப்படங்கள் மட்டுமின்றி, பிரபல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களும் திரையிடப்பட்டன. இவ்விழாவின் இறுதி நாளான நேற்று (டிச 19) இரவு சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும் (மகாராஜா), சிறந்த நடிகையருக்கான விருது சாய் பல்லவிக்கும் (அமரன்) வழங்கப்பட்டது. சிறந்த படமாக 'அமரன்' திரைப்படமும்,  சிறந்த இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷும் (அமரன்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமரன், லப்பர் பந்து, நந்தன்

விருதுகளின் முழுப்பட்டியல்

சிறந்த படம் - அமரன்

இயக்குநர்- ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

சிறந்த இரண்டாவது படம் - லப்பர் பந்து

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் லக்ஷ்மணன் இருவருக்கும் தலா ரூ.50,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - வேட்டையன்

இயக்குநர் - த.செ.ஞானவேல்

சிறந்த சமூகப் பொறுப்புத் திரைப்படம் - நந்தன்

இயக்குநர் - இரா.சரவணன்

ஸ்பெஷல் ஜூரி விருது - ஜமா

இயக்குநர் பாரி இளவழகனுக்கு ரூ.50,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது - வாழை (இயக்குநர் - மாரி செல்வராஜ்)

ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது - தங்கலான் (இயக்குநர் பா.ரஞ்சித்)

சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (மகாராஜா)

ரூ.50,000 பரிசுத் தொகை.

சிறந்த நடிகையர் - சாய் பல்லவி (அமரன்)

ரூ.50,000 பரிசுத் தொகை.

சிறந்த இசையமைப்பாளர் - ஜீ.வி.பிரகாஷ் குமார் (அமரன்)

ரூ.50,000 பரிசுத் தொகை.

பாரி இளவழகன், நித்திலன் சுவாமிநாதன், ஜீ.வி.பிரகாஷ் குமார்

சிறந்த கதை - நித்திலன் சுவாமிநாதன் (மகாராஜா)

ரூ.50,000 பரிசுத் தொகை.

சிறந்த துணை நடிகர் - அட்டக்கத்தி தினேஷ் (லப்பர் பந்து)

சிறந்த துணை நடிகையர் - துஷாரா விஜயன் (வேட்டையன்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல் (வாழை)

நம்பிக்கைக்குரிய நடிகர் - அர்ஜுன் தாஸ் (ரசவாதி)

ஃபேவரட் நடிகர் - அரவிந்த் சுவாமி (மெய்யழகன்)

ஃபேவரட் நடிகையர் - அன்னா பென் (கொட்டுக்காளி)

ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது - இயக்குநர் சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லதுரை)

ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது - யோகி பாபு (போட், கோழிப்பண்ணை செல்லதுரை)

அர்ஜுன் தாஸ், அன்னா பென், அரவிந்த் சுவாமி

சிறந்த ஒளிப்பதிவு - சாய் (அமரன்)

சிறந்த படத்தொகுப்பு - பிலோமின் ராஜ் (மஹாராஜா)

சிறந்த ஒலிப்பதிவு - சுரேன், அழகியக்கூத்தன் (கொட்டுக்காளி)

இருவருக்கும் சேர்த்து ரூ.50,000 பரிசுத் தொகை.

எடிட்டர் பிலோமின் ராஜ், அருள்நிதி

சிறந்த கலை இயக்குநர் - மூர்த்தி (தங்கலான்)

அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது - அருள்நிதி (ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை)

சிறந்த குறும்படம் - கயமை (பரிசுத் தொகை ரூ.10,000

இயக்குநர் - ராஜ்குமார்



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies