BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 27 December 2024

'குடும்பத்தினர் அதானியை சந்திக்கவில்லை என முதல்வர் சொல்வாரா?' - ஆதாரம் இருக்கு என்கிறார் ஹெச்.ராஜா

" 'அம்பேத்கர் என்று கூறுவதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்ற அமித் ஷாவின் கருத்து சரிதானா?"

"நாடாளுமன்றத்தில், அமைச்சர் அமித் ஷா ஒன்றரை மணி நேரம் பேசியுள்ளார். அதில் அவர் பேசிய கருத்துகளை, ஒட்டி, வெட்டி, திரித்துப் பேசி அரசியல் செய்துவருகின்றன எதிர்க்கட்சிகள். அம்பேத்கர் உயிரோடிருந்த காலத்தில் அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழையவிடக்கூடாது எனச் செயல்பட்ட தீயசக்திதான் காங்கிரஸ். நேரு தனக்கு தானே பாரத ரத்னா விருது கொடுத்துக்கொண்டார். பிறகு இந்திரா காந்தி, ராஜீவ்காந்திக்கு கொடுத்தார்கள். காங்கிரஸ் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பிறகுதான் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா கிடைத்தது. அம்பேத்கர் முதல்முறையாக ராஜ்யசபாவுக்கு செல்வதற்கும் ஜன சங்கத்தின் உதவிதான் காரணம். ஆகவே அவர்கள்தான் அம்பேத்கர் விரோதிகள். அனாவசியமாக நாடாளுமன்றத்தில் ரெளடித்தனம் செய்கிறது, காங்கிரஸ்"

அம்பேத்கர்

"ஆனால் 'இந்தியாவின் அரசியலமைப்பிற்கும், அம்பேத்கரின் சித்தாந்தத்திற்கும் பா.ஜ.க-வினர்தான் எதிரானவர்கள்' என்கிறாரே ராகுல்?"

"ராகுல் காந்தி டி ஷர்ட், ஜீன்ஸ் அணிந்துகொண்டு நாடாளுமன்றத்துக்குள் வருகிறார். அவையில் தூங்குகிறார். மொபைல் பயன்படுத்துகிறார். இந்த நாட்டுக்கு மிகப்பெரிய கேடு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இருப்பதுதான். எனவே அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை"

ராகுல் காந்தி

" 'நாட்டை சுடுகாடாக மாற்றிவிட்டு சொர்க்கம் குறித்து பா.ஜ.க-வினர் பேசுகிறார்கள்' என ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம் செய்திருக்கிறாரே?"

"வி.சி.க மோசமான கட்சி. அதன் தலைவர் திருமாவளவன் நாகரீகமான மனிதரா?. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை மோசமாக பேசியவர் திருமா. பிறகு அவருடைய கட்சியிலிருக்கும் ஷாநவாஸ் மட்டும் எப்படி நாகரீகமான மனிதராக இருக்க முடியும்?. அவருக்கெல்லாம் பிரதமர் மோடி குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?. இவர்களையெல்லாம் நான் மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ளவில்லை"

ஆளூர் ஷாநவாஸ்

"எப்போதும் கடவுள் பெயரைச் சொன்ன நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்கள் அங்கு வென்றார்கள். இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க வேண்டும் எனக் கேட்கிறாரே சீமான்?"

"கோவையில் 58 பேர் இறப்பதற்குக் காரணமான குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி அல்உமா பாஷா. அவரை அப்பா என அழைப்பவர்தான் சீமான். எனவே, அப்பா பாஷா.. அப்பா பாஷா.. என உச்சரிக்கட்டும்"

சீமான்

"முன்பு ராகுல் காந்தியை பப்பு என்றீர்கள். இப்போது குண்டர் என்கிறீர்கள். எனவே ராகுல் காந்தியைப் பார்த்து பா.ஜ.க பயப்படுகிறதா?"

"ராகுல் குண்டர் போலத்தானே செயல்படுகிறார். அவரிடம் சாதாரண மனிதர்களிடம் இருக்கக்கூடிய பண்புகள் இல்லை. ராகுல் மோதியதில் பா.ஜ.க எம்.பிக்கு தலையில் ரத்தம் கொட்டியது. காங்கிரசில் யாருக்காவது அடிபட்டதா?. எனவே ராகுல் மீது தவறு இருக்கிறது என்று கூறுகிறோம்"

அமித்ஷா - ராகுல் காந்தி

"அதானி பெயரை யாரும் உச்சரித்துவிடக் கூடாது என்பதற்காகவே தினமும் பா.ஜ.க-வினரே அமளியில் ஈடுபட்டு அவையை ஒத்திவைக்க வழிவகை செய்கிறார்கள் எனக் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் சொல்கிறாரே?"

"அதானி விவகாரத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள்தான் சிக்கியுள்ளன. இங்கெல்லாம் பா.ஜ.க ஆட்சியில் இல்லை. அதேநேரத்தில் அமெரிக்கா அரசு நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசிடம் கேட்கவில்லை. பிறகு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?. எனவே அரசியல் உள்நோக்கத்துக்காக இந்த பிரச்சினையைக் கையிலெடுக்கிறார்கள். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதே அயோக்கியத்தனம். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனுப்போட முடியுமா?"

அதானி

"ஆனால், 'அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பா.ஜ.க ஆதரவளிக்குமா என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறாரே"

"முதலில் எனது குடும்பத்தினர் அதானியைச் சந்திக்கவில்லை என்று முதல்வர் சொல்வாரா?. சந்திப்பு நடந்ததற்கான ஆதாரம் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இருக்கிறது. நாடகமாடுவதற்கு நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவது மக்களுக்குச் செய்யும் துரோகம்"

ஸ்டாலின்

"ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கான வாக்கெடுப்பில், 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.க உறுப்பினர்கள் பங்கேற்கவில்லையே?"

"அவர்கள் அன்றைய தினம் வெவ்வேறு வேலைகளிலிருந்ததால் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை"

ஒரே நாடு ஒரே தேர்தல்

"2026 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க தலைமை விரும்புகிறது. எனவேதான் டி.டி.வி தினகரன் மூலமாக அந்த விருப்பத்தைச் சொல்லியிருக்கிறது என்கிறார்களே?"

"வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்த கருத்துக்களை நாங்கள் தலைமையிடம் சொல்வதற்கோ, அவர்கள் எங்களிடம் சொல்வதற்கோ எந்த தடையும் இல்லை. எனவே அவர்கள் எதாவது சொல்வதாக இருந்தால் எங்களிடம்தான் சொல்வார்கள். மாறாக டி.டி.வி தினகரனிடம் சொல்ல மாட்டார்கள். கூட்டணி குறித்ததெல்லாம் நாங்கள் எந்த கருத்தும் சொல்ல முடியாது"

டி.டி.வி தினகரன்

"ஆனால் அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை என்கிறாரே அண்ணாமலை. அவருக்கு மட்டும் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு அனுமதி இருக்கிறதா?"

"தற்போது அவர் எதுவும் சொல்லவில்லை. எங்களுடன் யார் கூட்டணியில் இருக்கிறார்களோ, அவர்கள் அப்படியே தொடர்கிறார்கள். இனி யார் வேண்டுமானாலும் வரலாம். அதை அகில இந்தியத் தலைமை ஏற்றும் கொள்ளலாம்"

எடப்பாடி பழனிசாமி

"அ.தி.மு.க-வில் ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கும் முயற்சி வெற்றியடையாது என்கிறார்களே எடப்பாடியின் ஆதரவாளர்கள்?"

"நேரடியாக எந்த கருத்தையும் எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் பார்த்துக்கொள்ளலாம்"

ஜெயக்குமார்

"எடப்பாடியின் குரலாக ஒலிக்கும் ஜெயக்குமார், 'பா.ஜ.க-வுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி உடன்பாடு வரப்போவதில்லை. பா.ஜ.க வளர்த்திருப்பதாகச் சொல்வது மாயை" என்கிறாரே?"

"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தே.ஜ கூட்டணிக்கு 80 லட்சம் வாக்குகள் கிடைத்தது. அ.தி.மு.க, தே.மு.தி.க இணைந்து ஒரு கோடி ஓட்டுக்களை வாங்கியிருக்கிறார்கள். எங்களுக்குக் கிடைத்த வாக்குகள் மூலம் பா.ஜ.க வளர்ந்திருப்பது தெரிகிறது. மீண்டும் சொல்கிறேன் கூட்டணி குறித்து நான் கருத்துச் சொல்ல மாட்டேன்"

அண்ணாமலை பாஜக

"ஒரு கோடி பேரை உறுப்பினராக இணைக்க இலக்கு நிர்ணயம் செய்தீர்கள். ஆனால் பல இடங்களிலும் பூத் கமிட்டி கூட அமைக்க முடியவில்லையே?"

"இதுவரை 40 லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள். விரைவில் இலக்கை அடைவோம். பூத் கமிட்டி அமைப்பது, மண்டல தலைவர் தேர்தல் நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை"

கமலாலயம்

"தை மாதம் தமிழக பா.ஜ.க-வுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிறீர்கள். ஆனால் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அண்ணாமலை தீவிரம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறதே?"

"புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என அகில இந்தியத் தலைமைதான் முடிவு செய்யும். இதிலும் நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன்"

விஜய்

" 'மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாத ஒரு அரசு மேலே இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது' என்கிறாரே த.வெ.க தலைவர் விஜய்?"

"விஜய் தமிழ்நாடு அரசியல் குறித்துப் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இதில் மணிப்பூர் குறித்துப் பேசுகிறாரா?. மணிப்பூர் கலவரத்துக்குக் காரணமே பா.சிதம்பரம்தான். அங்குள்ள சூழ்நிலை புரியாமல் இங்கிருக்கும் தற்குறிகள் பல கருத்துக்களைச் சொல்கிறார்கள்"



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies