கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா சரத்குமார், “தவெக தலைவர் விஜய்க்கு என் வாழ்த்துகள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் மகிழ்ச்சி. அவரவர் பாதையில் கொள்கையை முன்னெடுக்கின்றனர்.
அவர் மிகப்பெரிய நடிகர். அதையும் மீறி அவர் அரசியலுக்கு வந்திருப்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. சிறிய வயதில் இருந்தே எனக்கு விஜய்யை நன்றாக தெரியும். அவர் தந்தையின் இயக்கத்தில் நிறைய படம் நடித்துள்ளேன்.
சிறிய வயதில் இருந்தே விஜய்யை பார்த்திருக்கிறேன். அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது. விஜய் படங்கள் எதுவும் தடை செய்யப்படவில்லை. விஜய் படங்களை யார் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியாது.
நீதிமன்றம் மூலமாக அவர்கள் படத்தை திரையிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் கொடியின் வண்ணம் , சமத்துவ மக்கள் கட்சி கொடியின் வண்ணம் தான். அதை விஜய் பயன்படுத்தியிருப்பது நல்ல விஷயம்தான்.
பாஜகவை தாக்குவதற்கு விஜய் யோசித்து தான் பேசுவார் என நினைக்கிறேன். அவருடைய கண்ணோட்டம் வேறு. அவருடைய அரசியல் வேறு. விஜய் அதிகமாக பேசவே மாட்டார். திடீரென இந்த மாநாட்டில் வேறு ஒரு விஜய்யை பார்ப்பது போல இருக்கிறது.
திராவிட மாடலை எதிர்க்கிறேன் என்று தான் விஜய் சொல்லியிருக்கிறார். நான் கேள்விப்பட்டவரை பெரியாரின் அடிப்படையே நாத்திகம். மூடநம்பிக்கையை எதிர்ப்பது தான். அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY