தீபாவளி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது `ப்ரதர்'.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள `ப்ரதர்' திரைப்படத்தை காமெடி திரைப்படங்களுக்கு பெயர்போன ராஜேஷ் இயக்கியிருக்கிறார். பூமிகா, ப்ரியங்கா மோகன், நட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
மேடையில் பேசிய ஜெயம் ரவி, " படத்தை ரொம்ப போட்டுக் குழப்பிக்கல. குடும்பங்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களும் படத்துல இருக்கு. இதைவிட தீபாவளி ரிலீஸுக்கு என்ன டிக்மார்க் வேணும்னு தெரில. இந்த படத்தை முழுவதுமாக என்ஜாய் பண்ணி செய்தோம். பூமிகா மேமோட பிறந்தநாள் வரும்போது அவங்க வீட்டை மிஸ் பண்ணினாங்க. அப்போ ஒரே குடும்பமாக ஸ்பாட்ல கொண்டாடினோம். இந்த படத்தோட அத்தனை காட்சிகளையும் இயக்குநர் நல்லா எடுத்திருந்தார். எந்த காட்சியை வைத்து அடுக்குவதென சவால்கள் எடிட்டருக்கு வந்திருக்கும். அதுமட்டுமல்ல, குடும்ப திரைப்படத்தை அதோட தன்மையை புரிஞ்சு எடிட் பண்ணனும்.
என்னோட அப்பா எடிட்டர் மோகன் குடும்ப திரைப்படங்கள் அதிகமாக பண்ணியிருக்கார். அது எவ்வளவு கடினமான வேலைங்கிறது எனக்கு நல்லவே தெரியும். நட்டி சார் ஒரு தனித்துவமான நடிகர். அவருடைய ஒளிப்பதிவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இன்னைக்கு அவர் எப்படியான நடிகர்னும் புரிஞ்சுகிட்டோம். பூமிகாவை எங்க குடும்பத்துல இருக்கிற எல்லோருக்கும் பிடிக்கும். தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை குடும்பங்களுக்கு பூமிகா ஃபேவரைட். இந்த படத்துல அவங்க நடிக்கப் போறாங்கனு தெரிஞ்சதும் எங்க வீட்டுல `பூமிகா உனக்கு அக்காவா'னு கேட்டாங்க. இந்த படம் எனக்கும் நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கு. உங்க எல்லோருக்கும் பிடிச்ச திரைப்படமாக `ப்ரதர்' இருக்கும்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX