12578 என்ற எண் கொண்ட மைசூரு - தர்பங்கா எக்ஸ்பிரஸ் மைசூரு ரயில் நிலையத்திலிருந்து 1 நிமிடம் தாமதமாக காலை 10:30 மணிக்கு கிளம்பியிருக்கிறது. பெங்களூர், காட்பாடி, விஜயவாடா, குண்டூர், பிரயாக்ராஜ், பாட்னா ஆகிய பகுதிகளை கடந்து மூன்றாவது நாளில் இந்த ரயில் பீகாரின் தர்பங்காவை எட்டும்.
மைசூரில் நேற்று காலை கிளம்பிய இந்த ரயில் இரவு 7:39 மணிக்கு தமிழகத்தின் பெரம்பூர் ரயில் நிலையத்தை எட்டியிருக்கிறது. அங்கிருந்து 7:44 மணிக்கு கிளம்பி குண்டூரை நோக்கிச் சென்று கொண்டிருந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரவு 10:15 மணிக்கு இந்த ரயில் குண்டூரை அடைந்திருக்க வேண்டும். ஆனால், பெரம்பூருக்கும் குண்டூருக்கும் இடையில் கவரப்பேட்டை என்கிற இடத்தை ரயில் கடக்கையில் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.