மதுரை: இயற்கை பேரிடர் உதவி எண்கள் வெளியீடு!
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை!
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், "தென்மேற்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இது இந்திய பகுதிகளில் இருந்து அடுத்து 3 நாள்களில் விலகக்கூடும். இன்று, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முழுவதும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யலாம். இந்த மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் அதி கன மழையும் பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.