நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண டாக்குமென்ட்ரி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்பதை அவர்களுக்கு திருமணமான 2022-ம் ஆண்டிலேயே அறிவித்தனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கும் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. ஷாருக்கான், ரஜினி உட்பட உச்ச நட்சத்திரங்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்றது பலரும் நினைவிருக்கலாம்.
இவர்களின் திருமண டாக்குமென்ட்ரி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என அப்போதே அறிவித்து எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தார்கள். அதற்கான டிரைலரையும் அப்போது நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருந்தது. ஆனால் சொன்னப்படி அந்த டாக்குமென்ட்ரி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகமல் தாமதமானது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது அந்த டாக்குமென்ட்ரி வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
`நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற தலைப்பிலான இந்த டாக்குமென்ட்ரி வெளியாகவிருக்கிறது என்ற தகவல் நெட்ஃபிளிக்ஸிடமிருந்தே கிடைத்திருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்த டாக்குமென்ட்ரியின் பேஜ்ஜில் இதன் கால அளவையும் தற்போது அப்டேட் செய்திருக்கிறார்கள். இவர்களின் இந்த திருமண ஆவணப்படம் 1 மணி 21 நிமிடங்கள் கால அளவைக் கொண்டதாம். கூடிய விரைவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த டாக்குமென்ட்ரி வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX