தீபாவளியை ஒட்டி வரும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தாந்தேராஸ். இந்த நாளில் தான் தன்வந்திரி பகவான் அவதரித்தார் என்பார்கள். மேலும் குபேரரை வழிபடவும் ஏற்ற நாள். இந்த நாளில் குபேரரை வழிபட இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். செல்வச் செழிப்பு சேரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அக்டோபர் 29- ம் தேதி வருகிறது. இந்த நாளில் மாலை 6 மணிக்கு மேல் குபேர பூஜை செய்ய வீட்டில் செல்வ வளம் சேரும். இந்த பூஜையை வீட்டில் எளிமையாகச் செய்வது எப்படி என்று விளக்குகிறது இந்த வீடியோ.