நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் சூர்யா, பாபி தியோல் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சிவா, ``கங்குவா திரைப்படத்தை இரண்டு ஆண்டுகள் எடுத்தோம். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் சூர்யா என்ற மனிதரிடம் பழக அற்புதமான வாய்ப்பை எனக்குக் கடவுள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் 100 சதவிகிதத்தைக் கொடுத்தரலாம் என்று 100 முறை சொல்லியிருப்பீர்கள் சார் (சூர்யா). ஆனால், நான் உங்களை நிறைய நாட்கள் கஷ்டப்படுத்தியிருக்கேன். ஏழு நாட்கள் தண்ணீர் உள்ளேயான காட்சிகளை எடுத்தோம். அவ்வப்போது வெளியே வந்தாலும், ஆனால் அந்த நாட்களில் நீங்கள் பெரும்பாலும் தண்ணீர்குள்ளேயே தான் இருந்தீர்கள்.
என்னுடைய அடுத்து 10-15 ஆண்டுகளுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அடித்தளமாக இருக்கும் என்று ஆழமாக நம்புகிறேன். இந்தப் படத்தை பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள்.
மக்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுப்பது மிகப்பெரிய விஷயம். அதை எனக்குக் கடவுள் கொடுத்துள்ளார். ஆனால், இந்த ஆசை எனக்கு முதல்முறையாக வந்தப்போது எனக்கு அடித்தளம் தந்தது என்னுடைய நண்பர், வழிகாட்டி, வரம் அஜித் குமார் சார். அவர் என் மேல் வைத்த நம்பிக்கை தான் எனக்கு பலத்தை தந்துள்ளது.
கார்கி சார் இந்த படத்திற்கு வசனம் எழுதியிருப்பது வரம். இந்த படத்தில் சூர்யா புது மீட்டரை பிடித்துள்ளார்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX