BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 19 October 2024

Cinema Roundup: நிகழ்கால கங்குவா காட்சிகள்; அமரனுக்கு 5 வருடம்! - இந்த வார டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கு பார்க்கலாம்.

இயக்குநர் அர்ஜூன்!

சமீபத்தில் சாண்டல்வுட்டில் வெளியான `மார்டின்' என்ற திரைப்படத்தின் கதையை எழுதியது நம் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்தான். `சேவகன்' திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமெடுத்தவர் இதுவரை மொத்தமாக 12 படங்களை இயக்கியிருக்கிறார். தன்னுடைய அடுத்த டைரக்‌ஷனுக்கான வேலைகளையும் கையில் எடுத்துவிட்டார் ஆக்‌ஷன் கிங். `சீதா பயணம்' என்ற படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடா என மூன்று மொழிகளில் எடுக்கவிருக்கிறார். அர்ஜூன் தற்போது அஜித்துடன் `விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதை தாண்டி `தீயவர் குலைகள் நடுங்க', `அகத்தியா' ஆகிய திரைப்படங்களையும் தனது லைன் அப்பில் வைத்திருக்கிறார்.

Sorgavasal Poster

ஆர்.ஜே. பாலாஜி நெக்ஸ்ட்!

சூர்யாவின் 45-வது திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. டைரக்‌ஷன் மட்டுமல்ல அவர் நடிக்கும் திரைப்படத்தின் வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இவர் நடித்து வரும் `சொர்கவாசல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்டிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இவர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

`அமரன்' படத்திற்கு ஐந்து வருடம்!

மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது `அமரன்'. `ரங்கூன்' திரைப்படத்திற்குப் பிறகு இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின் இசை வெளீயீட்டு விழா பிரமாண்டமான முறையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மணி ரத்னம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு எனப் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

`Amaran' director Rajkumar Periasamy

இயக்குநர் மணி ரத்னத்தின் `தளபதி' திரைப்படத்தை பார்த்ததற்குப் பிறகுதான் சினிமாவுக்கு வரவேண்டும் என்ற ஆசை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு வந்ததாம். இத்திரைப்படத்தின் மொத்த ஆராய்ச்சி பணிகள் உட்பட பல வேலைகளுக்கு 5 ஆண்டுகள் வரை செலவழித்தாராம் இயக்குநர்.

ப்ரேமலு கூட்டணியின் அடுத்த ரிலீஸ்!

பெரிய நட்சத்திரப் பட்டாளங்களின்றி பெரிதளவில் பரிச்சயமில்லாத இளைஞர்கள் படையை வைத்து மலையாள இயக்குநர் கிரீஷ் ஏ.டி எடுத்த திரைப்படம்தான் `ப்ரேமலு'. மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு என அனைத்துப் பக்கங்களிலும் சூப்பர் ஹிட்டடித்தது. இந்தாண்டு வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலிலும் `ப்ரேமலு' இருக்கிறது. இதைத் தொடர்ந்து `ப்ரேமலு 2' வரும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். தவிர, இயக்குநர் கிரீஷ் ஏ.டியும் `ப்ரேமலு' படத்தின் நாயகன் நஸ்லெனும் நான்காவது முறையாக `ஐ எம் காதலன்' என்ற படத்திற்கு இணைந்தார்கள். இத்திரைப்படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.

Kanguva Second Single & I'm Kathalan

`கங்குவா' இரண்டாவது சிங்கிள்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது `கங்குவா'. இத்திரைப்படத்தின் வரலாற்று காட்சிகளைதான் பாடல்களிலும், ட்ரைலரிலும், டீசரிலும் பார்த்திருந்தோம். நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் குறித்தான எந்தவொரு அப்டேட்டையும் கொடுக்காமல் இருந்தனர். தற்போது அதை பாடல் மூலம் அறிமுகம் செய்கிறது படக்குழு. ஏற்கெனவே, `ஃபயர் சாங்' என்ற ஒரு பாடலை வெளியிட்டிருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடலான `வாமோஸ் பிரிங்கர் பேப்' அக்டோபர் 21-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திஷா பதானியும், பாபி தியோலும் அறிமுகமாகிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies