மேஷராசி அன்பர்களே!
பல வகைகளிலும் அனுகூலமான வாரம். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளை களின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் விருப்பத்தின்படி நடந்துகொள்வார் கள். அவர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புண்டு.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். வாரப் பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருக்கும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறு கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: 21,25
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே!.
ரிஷபராசி அன்பர்களே!
உறவினர்கள் மூலம் நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளைப் பற்றி இருந்து வந்த மனக்கவலை நீங்கும். வாரப் பிற்பகுதியில் உடல் ஆரோக்கி யத்தில் கவனமாக இருக்கவும். பழைய கடன்களில் ஒரு பகுதியைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற் படும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் கூடுதல் செலவும் ஏற்படும்.
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். நிர்வாகத்தினரின் பாராமுகம் அவ்வப்போது சோர்வை ஏற்படுத்தும். வாரப் பிற்பகுதியில் அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். பாரா முகமாக இருந்த புகுந்தவீட்டு உறவினர்கள் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்துகொள்வர்..
அதிர்ஷ்ட நாள்கள்: 22, 25
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
மிதுனராசி அன்பர்களே!
நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வார பிற்பகுதியில் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளும் ஏற் படும். குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர்களின் தலையீடைத் தவிர்க்கவும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும்.
வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்ய வேண் டாம். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாகும் வாய்ப்பு ஏற்படும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். சகோதரர்களிடம் கேட்ட பண உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 25,27
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
கடகராசி அன்பர்களே!
அதிர்ஷ்டம் தரும் வாரம். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளை களால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.
அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் பொறுமை அவசியம். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். உங்கள் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்: 23,26
அதிர்ஷ்ட எண்கள்:4, 9
வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்
தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
சிம்மராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவசதி போதுமான அளவு இருக்கும் என்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முடிவு எடுப் பதில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையுடன் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையும் அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகளும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.
அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் சில வீண்செலவு களும் ஏற்படும். சக வியாபாரிகள் மற்றும் பங்குதாரர்களிடம் அனுசரணையாகச் செல்வது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங் கள் நீங்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 23,26
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
கன்னிராசி அன்பர்களே!
மன நிம்மதி தரும் வாரம். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை.
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சில சலுகைகள் கிடைக்கும். உங்கள் ஆலோ சனைகள் நிர்வாகத்தினரின் பாராட்டு பெறும். சிலருக்கு இடமாறுதல் கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் செய்வதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி ஒன்று கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 24,27
அதிர்ஷ்ட எண்கள்:5, 6
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலம்தான் பெரிதுமுடையானை சிந்திப்பாரவர் சிந்தையில் உள்ளானை
ஏலவார்க் குழலாள் உமையம்மை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானை காணக் கண் அடியேன் பெற்றவாறே
துலாராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களுடன் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வீட்டில் பராமரிப்புப் பணிகளின் காரணமாக உடல் அசதி உண்டாகும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். உங்கள் ஆலோசனைக்கு நிர்வாகத்தினர் முக்கியத்துவம் தருவார்கள்.
வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். சிலருக்கு வியாபாரம் தொடர்பான தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது..
அதிர்ஷ்ட நாள்கள்: 23,26
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
சந்திராஷ்டமம்: 21 மாலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை
விருச்சிகராசி அன்பர்களே!
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப் பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆனால், கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும்.
அலுவலகத்தில் சக ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால், அவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். அலுவலக விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது.
வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நினைத்திருந்தால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்: 26, 27
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
சந்திராஷ்டமம்: 21 மாலை முதல் 22,23,24 விடியற்காலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
தனுசுராசி அன்பர்களே!
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறி யாகும். மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். பணியாளர்கள் விடுமுறையில் செல்வதால், அவர்களுடைய வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். பிறந்த வீட்டிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 21, 22
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
சந்திராஷ்டமம்: 24 விடியற்காலை முதல் 25,26 காலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்
மகரராசி அன்பர்களே!
மனதில் அவ்வப்போது தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்தமுடியாது. சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். பணவசதி திருப்திகரமாக இருந்தாலும், பிள்ளை களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும். வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.
அலுவலகத்தில் சற்று இறுக்கமான சூழ்நிலையே காணப்படும். பணிச்சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தச் சாதகமான வாரம். தேவையான நிதியுதவி கிடைக்கும். வாடிக்கை யாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். கணவரின் அன்பும் ஆதரவும் மன துக்கு உற்சாகம் தரும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 22, 24
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
சந்திராஷ்டமம்: 26 காலை முதல் 27 முழுவதும்
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
கும்பராசி அன்பர்களே!
பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். அரசாங்கக் காரியங் கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. நண்பர்கள் மூலம் பிற்காலத்தில் ஆதாயம் தரக்கூடிய தகவல் ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சக வியாபாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 24,27
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!
மீனராசி அன்பர்களே!
வாரப் பிற்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு நண்பர்களின் சந்திப்பும் அவர்கள் மூலம் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.
அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் தேவை. பங்குதார்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உற்சாகம் தரும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். கணவரிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 23,25
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே