திரைப்படங்களில் தன்னை விட வயது குறைவான அல்லது தனது மகள் வயதை ஒத்த நடிகைகளுடன் நடிகர்கள் ஜோடி சேர்ந்து நடித்து காதல் டூயட் பாடுவது வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாலிவுட்டும் அதற்கு விலக்கல்ல. நடிகை தீபிகா படுகோனேயின் கணவர் ரன்வீர் சிங் புதிதாக சேர்ந்து நடிக்கப்போகும் நடிகைக்கு வயது 19. ரன்வீர் சிங்கிற்கு வயது 39 வயதாகிறது. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப்படங்களில் அதிக அளவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள 19 வயதாகும் சாரா அர்ஜூன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.
சாரா அர்ஜூன் `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது தவிர தெய்வ திருமகள் படத்திலும் நடித்து பெரும் பெயர் பெற்றவர். இயக்குநர் ஆதித்ய தார் மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை எடுக்க இருக்கிறார். அப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கபடவில்லை. ஆனால் படத்தில் பிரதான ஹீரோ கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜூன் நடிக்க இருக்கிறார் என்பது தகவல். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இருவரும் சேர்ந்து நடிப்பது உறுதியாகிவிட்டது என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.
இந்த செய்தி சோசியல் மீடியாவில் வெளியானவுடன் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
ஒரு ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், `ரன்வீர் சிங் அறிமுகமான பேண்ட் பாஜா பாரத் படத்தில் நடித்த போது சாராவிற்கு 5 வயது. இப்போது 39 வயதாகும் நிலையில் ரன்வீர் சிங் சாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கப்போகிறார். இது சரியா?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
வேறு ஒருவர், `இதற்கு ரன்வீர் சிங்கை குறை சொல்ல முடியாது’ என்றும், `படத்தின் தயாரிப்பாளர்களைத்தான் குறை சொல்லவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
வேறு சிலர் நடிகை தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோர் ஷாருக்கானுடன் நடிக்கும்போது 20 வயது இடைவெளி இருந்ததை சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ரன்வீர் சிங் நடிக்கும் படத்தில் நடிகர் மாதவன், சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX