கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்து, தேசமே சல்யூட் அடித்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்த்திருக்கிறார், அவரின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தேசப் பற்று மிக்க இராணுவ வீரரின் எல்லையற்ற அன்பு, தேசப் பற்று, தியாகம், வீரம், அவரது குடும்பம் பற்றிய உணர்வுப்பூர்வமான உண்மைக் கதையைச் சொல்லும் இத்திரைப்படம் தீபாவளிக்குத் திரைக்காணவிருக்கிறது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றிருந்தது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' திரைப்படம் குறித்து பேசுகையில் 'பிரின்ஸ்' பட தோல்வி குறித்தும் அந்த சமயத்தில் அஜித்குமார் சொன்ன அட்வைஸ் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் சிவகார்த்திகேயன், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'பிரின்ஸ்'னு ஒரு படம் தீபாவளிக்கு வெளியாகியிருந்துச்சு. முதல் நாளே படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்துச்சு. சாயந்தரமே படம் நல்ல இல்லைனு உறுதியா சொல்லிட்டாங்க. அப்போ அந்த நாள் முழுவதும் 'தவறான கதைய தேர்ந்தெடுத்திட்டமோ...' என எனக்கு நானே கேள்வி கேட்டு வருத்தத்துல இருந்தேன். விமர்சனமெல்லாம் தாண்டி, 'இவன் அவ்வளதான்', 'இவன் காலி, அவுட்' அப்டிங்கிற விமர்சனம்தான் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. நானும் அதெல்லாம் கேட்டுட்டு மனம் உடைஞ்சு போயிட்டேன்.
அந்த சமயத்துல நண்பர் ஒருவரோட வீட்டுக்கு தீபாவளி பண்டிகைக் கொண்டாட போயிருந்தேன். அங்க கதவ திறந்ததும் அஜித் சார் இருந்தார். என்னைப் பார்த்த உடனே, 'உங்க வளர்ச்சியைப் பார்த்து எல்லாரும் பயப்படுறாங்க அப்டின, You're into the big league, Welcome' என்று சொன்னார்.
எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. மறுபடியும் அதையே அழுத்தமாகச் சொன்னார். 'விமர்சனத்தை சரியா புரிஞ்சுக்கணும். நம்ம படம் சரியில்லைனு சொன்ன தவறை சரி செஞ்சுக்கலாம். ஆனால், நம்மளே காலின்னு சொன்ன அதை எடுத்துக்கக் கூடாது, நம்பக் கூடாது.' அஜித் சார் சொல்லித் தந்த பாடம் அது" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU