BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 18 October 2024

Amaran: `படம் இருக்கு! அதான் தூப்பாக்கியை கைல வாங்கிட்டார்ல' - அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் மணி ரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர். தீபாவளி வெளியீடாக `அமரன்' திரைக்கு வருகிறது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ், " நிறைய டிஸ்யூ பேப்பர்லாம் வச்சுகிட்டு கமல் சார் இந்த படத்தை பார்த்தார்னு கேள்விப்பட்டேன். இந்த படம் தாக்கத்தை கொடுக்கும். இது கொண்டாட்ட வடிவிலான திரைப்படம் கிடையாது. இத்திரைப்படம் நம்மை பெருமை கொள்ள வைக்கும். " எனப் பேசிய அவரிடம், " டான் சிவகார்த்திகேயனுடன் எப்போது படம் பண்றீங்க' என எழுப்பிய கேள்விக்கு, "ரொம்ப நாள்களாக அதுக்கான பேச்சுகள் போயிட்டு இருக்கு. கூடிய விரைவில நடக்கும். அதான் துப்பாக்கியை கைல வாங்கிட்டார்ல." என்றார்.

Sai Pallavi

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் மணி ரத்னம், " சில பேர் வந்ததும் மிகப்பெரிய ஹீரோ ஆகிடுவாங்க. சிலர்தான் படி படியாக வளர்வாங்க. சிவகார்த்திகேயன் அப்படிதான் வந்திருக்கீங்க. நீங்க என்னை மாதிரி சிவா. நீங்க நிறைய பேருக்கு ஊக்கம் கொடுத்திருக்கீங்க சிவா!" என சிவகார்த்திகேயனை நோக்கி கூறியவர், " நான் சாய் பல்லவியின் மிகப் பெரிய ரசிகன். விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.

மேலும், " முகுந்த் வரதராஜனாக நடிப்பதற்கு சிவகார்த்திகேயன்தான் சரியான தேர்வு. `எங்க வீட்டு செல்லப் பிள்ளை'னு வெளில ஒரு பேனர் பார்த்திருந்தேன். இந்த கதை மக்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்." என்றார் சாய் பல்லவி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies