'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?' என்பது 'கண்ணா ரெண்டு நிலா பாக்க ஆசையா? - ஆக மாறப் போகிறது. ஆம்... இன்றிலிருந்து வரும் நவம்பர் 25-ம் தேதி வரை வானில் இரண்டு நிலாக்கள் தெரிய உள்ளது.
சூரியனை சுற்றி வருபவைகளை கோள் என்கிறோம். அதுவே சூரியனை சுற்றும் கோள்களை துணை கோள் என்கிறோம். அந்த வகையில் நிலா ஒரு துணை கோளாகும். இதனிடையே இன்று முதல் வானில் இரண்டு நிலா தெரியும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த இரண்டாவது நிலாவிற்கு (விண்கல்) '2024 PT 24' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலாவை கண்களால் காணமுடியாது. இது ஒரு 'மினி நிலா'. அதாவது இந்த மினி நிலா, நிலாவை விட 1,73,700 மடங்கு சிறியது. அதனால் இந்த நிலாவை டெலஸ்கோப் மூலம் தான் பார்க்க முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிலா பூமியின் அருகே சுமார் 14 லட்ச கிலோ மீட்டர் தூரத்தில் வர இருக்கிறது. இந்த மினி நிலவின் அளவு (விட்டம்) 5 முதல் 20 மீட்டர் வரை இருக்கும்.
கவிஞர்கள் முதல் காதலர்கள் வரை நிலாவின் ஒளி, நிலா அழகு என்று வர்ணிப்பார்கள். ஆனால், உண்மையில் பாறைகள் மற்றும் மண்ணால் ஆன நிலாவிற்கு என தனி ஒளி கிடையாது. சூரியனின் ஒளி நிலவின் மேற்பரப்பில் பட்டு, அந்த ஒளி பூமிக்கு திரும்பும்போது, நிலா ஒளிர்வது போல நமக்கு தெரிகிறது. இதேப்போலத் தான், மினி நிலாவின் மீதும் சூரிய ஒளிப்பட்டு திரும்பும்போது, அந்த நிலா ஒளிரும்.
இனி இரண்டு நிலாக்களை காண ரெடியா இருங்க மக்களே!