BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 13 September 2024

Fenugreek: 'வெந்தயம்'னா என்ன அர்த்தம் தெரியுமா? | Health Benefits

Fenugreek: 'வெந்த' என்றால் 'வேக வைக்கப்பட்ட' என்று பொருள். 'அயம்' என்பது இரும்புக்கான தமிழ் கலைச்சொல். வெந்தயம் என்றால் சமைக்கப்பட்ட இரும்பு என்பது பொருள். அந்தளவுக்கு இதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது என்கிறார், சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு.

* ரத்தசோகை இருப்பவர்கள், 'ஹீமோகுளோபின் அதிகரிக்கவில்லையே' என்று வருத்தப்படுபவர்கள், 10 கிராம் வெந்தயத்தையும், 200 கிராம் பச்சரிசியையும் உப்பு போட்டு வேக வைத்துச் சாப்பிட்டு வரலாம்.

* இதே அளவு வெந்தயம், பச்சரிசியை மாவாக்கி, கருப்பட்டி சேர்த்து களிபோல கிண்டியும் சாப்பிடலாம்.

* இட்லி, தோசை மாவிலும் ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் வெந்தயம் சேர்த்து அரைக்கலாம்.

Fenugreek

* வெந்தயம், கோதுமை இரண்டையும் சம அளவு எடுத்து தனித்தனியாக வறுத்து, பொடித்து, இரண்டிலும் தலா அரைக்கரண்டி எடுத்து, கருப்பட்டி சேர்த்து, கடுங்காப்பி போல தயாரித்து அருந்தினால் உடல் உஷ்ணம் குறையும்.

*வயிற்றில் அமீபியாசிஸ் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், 5 கிராம் வெந்தயப்பொடியை ஆறிய வெந்நீரில் போட்டு ஊற வைத்து, அருந்தி வந்தால் பிரச்னை குறையும்.

* டைபாய்டு, மலேரியா வந்தவர்களுக்கு குடல் புண்ணாகியிருக்கும். வெந்தயத்தை நெய்விட்டு வறுத்து, பொடித்து, சூடான சாதத்தில் போட்டுச் சாப்பிட்டு வந்தால், குடல் புண் விரைவில் ஆறும். கல்லீரல் மற்றும் மண்ணீரலில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் குறையும்.

* மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை ருசிக்கேற்ப எடுத்து, நெய்விட்டு வறுத்து, பொடித்து, அதனுடன் புளிக்கரைசலும் உப்பும் சேர்த்து, குழம்பு அரைப்பங்காக வற்றும்வரை கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு வராது. இதுதான் முறையான வெந்தயக்குழம்பு செய்முறையும்கூட.

சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு

* பாலூட்டும் தாய்மார்கள் 5 கிராம் வெந்தயத்தை வேக வைத்து, கடைந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு அதிகமாகும்.

* குடம் புளி, சீமை அத்திப்பழம் இரண்டையும் நீர் விட்டு அரைத்து, சாறெடுத்து, அந்தச் சாற்றில் 5 கிராம் வெந்தயத்தை வேக வைத்து, கடைந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி, பித்த மயக்கம் சரியாகும்.

* கொதி நீர், சூடான எண்ணெய் போன்றவை உடல் மேல் தெறித்துவிட்டால், வெந்தயத்தை அரைத்துப் பூசினால் தழும்பில்லாமல் ஆறும்.

* வெந்தயம், சீமை அத்திப்பழம் இரண்டையும் நீர் விட்டு அரைத்து கட்டிகள் மேல் வைத்துக்கட்ட, அவை சீக்கிரம் பழுத்து உடையும்.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies