BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 30 September 2024

Chandrachud: தவறிய IIT கனவு; அலைக்கழித்த நீதிமன்றங்கள் - தலித் மாணவருக்காக அதிரடி காட்டிய சந்திரசூட்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அதுல் குமார் என்ற தலித் இளைஞர் ஐஐடி தன்பாத்தில் சேர முயற்சித்தபோது, அவரின் சேர்க்கைக்கான 17,500 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதுல் குமாரின் தந்தை ஒரு தினக் கூலியாக வேலை செய்பவர். எவ்வளவு முயன்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்களால் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. எனினும் உறுதியாக இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மூன்று மாத காலம் எஸ்.சி/எஸ்.டி கமிஷன், ஜார்க்கண்ட் சட்ட சேவைகள் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு எந்தத் தீர்வும் கிடைக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், "இந்த இளம் திறமையான பையனை வெளியேச்செல்ல அனுமதிக்க முடியாது. அவரை விட்டுவிட முடியாது. அவர் ஜார்க்கண்ட் சட்ட சேவைகள் ஆணையத்துக்கு சென்றுள்ளார், பின்னர் சென்னை சட்ட சேவைகள் ஆணையத்துக்கு, பின்னர் உயர் நீதிமன்றத்துக்கு. ஒரு தலித் பையன் இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்." எனக் கூறி அவரை ஐஐடியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டார்.

Supreme Court

"ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனுதாரர் தனது சேர்க்கைக்கான எல்லாவற்றையும் செய்துள்ளார். இவரை அப்படியே விட்டுவிடக் கூடாது... ஐஐடி தன்பாத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கட்டணம் செலுத்தியிருந்தால் எந்த பேட்சில் இருந்திருப்பாரோ அதே பேட்சில் இவர் சேர்த்துக்கொள்ளப்படுவார்." என தீர்ப்பளித்தார் சந்திரசூட்.

மனுவில் கூறியுள்ளதன்படி, மனுதாரரின் தந்தை தினமும் 450 ரூபாய் கூலிக்கு பணியாற்றுபவர். 17,500 ரூபாய் மொத்தமாக திரட்டுவது சவாலானதாக இருந்திருக்கிறது. அவரின் கிராம மக்களிடம் இருந்து பணம் வாங்கியிருக்கிறார். ஆனாலும் ஜூன் 24-ம் தேதி மாலை 5 மணிக்கு சரியாக பணத்தை செலுத்தமுடியாமல் போயிருக்கிறது.

"அவரின் இயலாமைக் காரணமாக மட்டுமே அவரால் பணம் கட்ட முடியவில்லை என்பதைக் கருத்தில்கொள்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்" எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் சந்திரசூட்.

இந்திய அரசியலமைப்பின் 142 வது பிரிவு நீதியின் நலனுக்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐஐடி தன்பாத், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் அதுல் குமாரை சேர்க்க உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சிறப்பான தீர்ப்பை வாழங்கிய தலைமை நீதிபதி மாணவர் அதுல் குமாருக்கு "ஆல் தி பெஸ்ட்" தெரிவித்தார்.

ஐஐடியில் தனது இடத்தை மீட்ட இளைஞன் அதுல், "எனக்கு இடம் கிடைத்துள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பொருளாதார பிரச்னைகளால் என்னுடைய இடம் பறிக்கப்படாது என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தடம்புரண்ட ரயில் மீண்டும் தண்டவாளத்தை அடைந்துள்ளது. ஐஐடி தான்பாத்தில் இருந்து எலெக்ட்ரிகல் இஞ்சினியராக உருவாக கடுமையாக உழைப்பேன்" எனக் கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies