'ஆதார் போல விவசாயிகளுக்கு தனி எண் கொடுக்கப்பட உள்ளது' என்று மத்திய வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி கூறியுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது...
"கடந்த மத்திய அமைச்சரவையில், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதமாக டிஜிட்டல் வேளாண்மை திட்டத்திற்காக ரூ.2,817 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு முறை விவசாயிகள் எதாவது வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போதும், அந்தத் தகவல்களை சரிப்பார்க்க வேண்டியுள்ளது. இதனால் நேர விரயம், செலவு, பிரச்னைகள் போன்றவை ஏற்படுகிறது. இவை ஏற்படாமல் இருக்க தற்போது புதியதாக விவசாய பதிவேடு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இது வேளாண்துறையை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு பகுதி ஆகும்.
தற்போது மத்திய அரசிடம், மாநில அரசுகள் கொடுத்த விவசாய நிலங்கள், பயிர் சாகுபடி குறித்த தகவல்கள் மட்டுமே உள்ளன. விவசாயிகளின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. இதனால் தான் மேலே சொன்ன சிக்கல் ஏற்படுகிறது. விவசாய பதிவேட்டை உருவாக்கும்போது இந்த சிக்கல் தீர்ந்துவிடும்.
'இந்த பதிவேடு எப்படி உருவாக்கப்படுகிறது?', 'அதில் விவசாயிகள் பெயரை எப்படி பதிய வேண்டும்?' என்பதுப்பற்றி விரைவில் கூறப்படும்... முகாம்களும் நடத்தப்படும். இதற்கான பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கப்படும். 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளின் தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், ஆதார் எண்ணைப் போல ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனி அடையாள எண் வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் எளிதாக அனைத்து வேளாண் திட்டங்களை பெற முடியும். மேலும் இந்த தகவல்கள் அரசு தங்களது திட்டங்களை தீட்ட உதவும்" என்று பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
36 words / 337 characters
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY