விஜய் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இந்த வருடம் தொடங்கவுள்ளது. அதன் குறித்த லேட்டஸ்ட் தகவல் இதோ!
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை விஜய் டிவியையே சேரும். கடந்த 2017ம் ஆண்டு இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் ஒளிபரப்பானது. நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக ஒரு டிவி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க முன்வந்தார். நிகழ்ச்சியானது தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் புதிதாக இருந்தாலும் விஜய் டிவியின் திறமையான கன்டென்ட் குழுவினரால் தொடங்கிய சில நாட்களிலேயே ஹிட் ஆக்கப்பட்டது.
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான போது, பெரிய அளவில் கவனிக்கப்படாத நடிகை ஓவியா இந்த ஷோ மூலம் ரொம்பவே பிரபலமானார். முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வெல்ல, அடுத்தடுத்து வரிசையாக ஏழு சீசன்கள் ஒளிபரப்பானது. இடையில் ஒரே ஒரு சீசன் ஹாட் ஸ்டார் ஒ.டி.டி. தளத்திலும் ஒளிபரப்பானது. ஆரம்பத்தில் சில சீசன்கள் ஜூன் ஜூலையில் ஒளிபரப்பாகத் தொடங்கி வந்த நிலையில், கொரோனா பரவலுக்கு பிந்தைய வருடங்களிலிருந்து அக்டோபருக்கு மாறியது.
முதல் ஏழு சீசன்கள் வரை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் சினிமா கமிட்மென்ட்டுகள் எனச் சொல்லி இந்த சீசனைத் தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என அறிவித்து விட்ட நிலையில் இந்த சீசனைத் தொகுத்து வழங்கவிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட தேர்வாகி விட்டதாகக் கூறப்படுகிறது.தொகுப்பாளர் ஜாக்குலின் தொடங்கி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் செந்தில், சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் வினோத் பாபு, பவித்ரா ஜனனி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் குறித்த தகவல்களையும் எக்ஸ்க்ளூசிவாக நாம் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தொடங்கும் தேதி குறித்தும் நமக்குக் நம்பகமான தகவல் கிடைத்துளளது. அதன்படி, வரும் அக்டோபர் முதல் வாரம் அதாவது 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கவிருக்கிறதாம்.தொடர்ந்து பிக் பாஸ் தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்டுகளுக்கு விகடனுடன் இணைந்திருங்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://bit.ly/4gzKTsI
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://bit.ly/4gzKTsI