வையங்குடி கிராமத்தில் உள்ளது 1300 ஆண்டுகள் பழைமையான பசுபதீஸ்வரர் திருக்கோயில். ராஜராஜசோழனும் ராஜேந்திர சோழனும் திருப்பணி செய்த தலம். ஆனால் காலப்போக்கில் ஆலயம் சிதை உற்று வழிபாடின்றிப் போனது. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த வண்டார்குழலி என்கிற பெண் மனத்தில் உறுதி கொண்டார். திருப்பணி முடிந்தால்தான் திருமணம் என சத்தியம் செய்தார். அதன் பின் அவர் வாழ்வில் எதிர்கொண்ட சோதனைகளை விவரிக்கிறது இந்த வீடியோ.