கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், தங்கி எம்.பி.ஏ படித்து வருகிறார். வார இறுதி நாளான சனிக்கிழமை இரவு, கோரமங்களாவில் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். ஞாயிறு நள்ளிரவு 1:30 மணியளவில் பார்ட்டி முடிந்து, ஹொங்கசந்திராவில் இருக்கும் தன் இருப்பிடத்துக்கு நண்பர்களுடன் காரில் புறப்பட்டிருக்கிறார். அவர்கள் சென்ற கார் ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு காவல்துறை வந்து விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, அந்த மாணவி அந்த இடத்தைவிட்டு விலகி, அந்த வழியே செல்பவர்களிடம் லிஃப்ட் கேட்டிருக்கிறார்.
பலர் வேறுவழியில் செல்வதாக கூறி மறுத்த நிலையில், ஒருவர் மட்டும் அவருடைய அறையில் இறக்கிவிடுவதாக கூறி பைக்கில் லிஃப்ட் கொடுத்திருக்கிறார். ஆனால், குறிப்பிட்ட தூரத்தில் இறக்கிவிடாமல், அதைக் கடந்து சென்றிருக்கிறார். ஆபத்தை உணர்ந்த அந்த மாணவி SOS இயக்கி அதன்மூலம், அவரின் தந்தை, சகோதரர்கள், காவல்துறைக்கு தகவல் செல்லும்படி செய்திருக்கிறார். இந்த எச்சரிக்கை அழைப்பை ஏற்ற காவல்துறை, எச்சரிக்கை வந்தப் பகுதியான ஓசூர் மெயின் ரோட்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ராஜீவ் காந்தி நகரின் ஒதுக்குப்புறமான இடத்தை சென்றடைந்தது. அங்கு ஆடை நீக்கப்பட்ட நிலையில், அந்த மாணவி ஒதுங்கி இருந்தார்.
அதே இடத்தில் ஒரு ஆண், அறை நிர்வாணமாக இருப்பதையும் காவலர்கள் கண்டிருக்கிறார்கள். காவலர்கள் வந்ததும், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே காவலர்கள், அங்கிருந்த சில ஆடைகள் மூலம், அந்த மாணவியை போர்த்தி, பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
`பைக்கில் லிஃப்ட் கொடுத்தவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்" என்ற அந்த மாணவியின் புகாரின் அடிப்படையில், காவல்துறை பிரிவு 64-ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்திருக்கிறது. அந்த மாணவியின் பெற்றோர் நேற்று பெங்களூரு வந்தனர். சந்தேக நபரைப் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணை தொடர்வதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88