BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 23 August 2024

சோகத்தில் முடிந்த புனித பயணம்: நேபாள பேருந்து விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் இன்று இந்தியா வருகிறது

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள புஷாவல் என்ற இடத்தை சேர்ந்த 110 பேர் அயோத்திக்கு புனிதப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் அயோத்தியில் ராமர் கோயிலில் வழிபட்டுவிட்டு அங்குள்ள சித்ரகூட், கோரக்பூர் போன்ற பல இடங்களுக்கு சென்று அங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்தினர். பின்னர் நேபாளத்தில் இருக்கும் கோயில்களில் தரிசனம் செய்வதற்காக இரண்டு பஸ்களில் அவர்கள் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றனர். நேபாளத்தில் உள்ள போகாரா என்ற இடத்தில் இருந்து காட்மாண்டுவிற்கு சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள தானாஹு மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென 44 பேர் பயணம் செய்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து வெளியேறி 150 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது. அங்கு மார்ஷ்யங்கடி எனும் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பஸ் ஆற்றில் விழுந்தது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் நேபாள அதிகாரிகள் மீட்புப்பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் 24 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் ஆவர். 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் காட்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவரை காணவில்லை. காயம் அடைந்தவர்களில் 12 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் நேபாள எல்லையில் பெறப்பட்டு அவை மகாராஷ்டிரா அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச மீட்பு மற்றும் மறுவாழ்வு கமிஷனர் நவீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் அனில் பாட்டீல் கூறுகையில், ''விபத்தில் இறந்தவர்களின் உடல்களை கொண்டு வர நேபாளம் மற்றும் உத்தரப்பிரதேச அரசுடன் மகாராஷ்டிரா அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது'' என்றார். உயிரிழந்தவர்களில் சிலருக்கு 60 வயதிற்கும் அதிகமாகும். 6 வயது குழந்தையும் இறந்துள்ளது. பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் மற்றும் நடத்துநரும் இறந்துவிட்டனர். மகாராஷ்டிராவில் இருந்து புனிதப்பயணம் வந்தவர்களை நேபாளத்திற்கு அழைத்துச்செல்ல பஸ் கொடுத்த கோராக்பூர் கேசர்வானி டிராவல்ஸ் அதிபர் விஷ்னு கேசர்வானி இது குறித்து கூறுகையில், ''பிரயக்ராஜ் என்ற இடத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. அங்கிருந்து சித்ரகூட், அயோத்தி, கோரக்பூர், சோனவ்லி, லும்பினி ஆகிய இடங்களை பார்த்துவிட்டு நேபாளத்தில் உள்ள போகாராவிற்கு சென்றனர். அங்கும் பார்த்துவிட்டு காட்மாண்டுவிற்கு சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது''என்றார்.

இது குறித்து ஜல்காவ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆயுஷ் பிரசாத் கூறுகையில்,'' புனிதப்பயணம் சென்றவர்கள் புஷாவல் தாலுகாவில் உள்ள வாரன்காவ் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் இரண்டு பஸ்களில் காட்மாண்டு சென்று கொண்டிருந்தபோது ஒரு பஸ் அம்புகேரனி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டது. மற்றொரு பஸ்சில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்''என்றார்.

இறந்தவர்கள் உடலை கொண்டு வர உத்தரப்பிரதேச பிரயக்ராஜ் மாவட்ட ஆட்சித்தலைவருடன் ஜல்காவ் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடர்பில் இருக்கிறார் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினார். இறந்தவர்கள் உடலை கொண்டு வர உடனே நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இன்று உடல்கள் அனைத்தும் சிறப்பு விமானத்தில் கோரக்பூரில் இருந்து நாசிக் கொண்டு வரப்படுகிறது. நாசிக்கில் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies