BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 11 November 2014

குடும்ப நல அறுவைச் சிகிச்சை : 11 பெண்கள் சாவு




In yet another case of alleged negligence at government-run health camps, eight women have died and 50 others hospitalized after botched up sterilization surgeries in Takhatpur, Bilaspur. According to reports, Janaki Bai (30), the first casualty in the case, had undergone sterilization at the health camp on Saturday and she fell ill soon after. Her condition deteriorated badly within 24 hours of the surgery and she was taken to Bilaspur district hospital where she succumbed on Monday morning.Five of the other 50 women admitted to the hospital also succumbed to their ailments late on Monday evening. All the victims had similar symptoms, vomiting and acute pain in abdomen, and 50 of them are presently under treatment at various health centres, 30 reportedto be in critical condition.Four health officials, including chief medical health officer of Bilaspur, have been suspended.

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அரசு ஏற்பாடு செய்திருந்த குடும்ப நல முகாமில், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 11 பெண்கள் உயிரிழந்தனர். 49 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பிலாஸ்பூர் சுகாதாரத் துறை அதிகாரி உள்பட 4 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் கோமல் பர்தேசி, செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிலாஸ்பூர் மாவட்டம், பெந்தாரி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் கடந்த சனிக்கிழமை குடும்ப நல அறுவைச் சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த முகாமில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 83 பெண்கள் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டனர். அதன்பிறகு, அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு சனிக்கிழமை இரவு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதால், அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை ஆகியவற்றில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் திங்கள்கிழமை 2 பேரும், செவ்வாய்க்கிழமை 9 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் 32 வயதுக்கு உள்பட்டவர்கள். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர்.இதுதொடர்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் அமர்சிங், செய்தியாளர்களிடம் கூறுகையில், "அறுவைச் சிகிச்சையின்போது அதிக ரத்த இழப்பு அல்லது நச்சுத் தொற்று காரணமாக, பெண்கள் இறந்திருக்கலாம்; பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்' என்றார்.ரமண் சிங் நேரில் ஆய்வு: இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், செவ்வாய்க்கிழமை மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies