BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 3 October 2014

கோள்களை பற்றிய தமிழர் அறிவு


 எப்படி அவ்வளவு தொலைவிலுள்ள கிரகத்தின் நிறம் கருப்பு என்று கண்டுபிடித்து அதற்கு காரி என்றும், அதற்கு வளையம் இருக்கிறது என்று கண்டுபிடித்து வளைந்தது என்ற பொருளில் சனி என்று நமது தமிழ் முன்னோர்கள் பெயரிட்டார்கள். காண்க:

  மிகப்பெரியது, விரிந்தது மற்றும் வாயுக்களின் காரணமாய் ஆழமானது என்று கண்டுபிடித்து வி-யாழன் என்று பெயரிட்டார்கள்.

 சிவப்பு நிறமுள்ளது என்று கண்டுபிடித்து செம்மையான வாய், செவ்-வாய் என்று பெயரிட்டார்கள்.
 பூக்கக் கூடியது என்று கண்டுபிடித்து பூ-மி என்று பெயரிட்டார்கள்.

 வெள்ளை நிறமானது என்று கண்டுபிடித்து வெள்ளி என்று பெயரிட்டார்கள்.
புத்தி கூர்மை உள்ளவர்கள்தான் சூரிய வெளிச்சத்திற்கு மிக அருகில் உள்ள கண்ணுக்கு எளிதில் புலப்படாத அந்த மிகச்சிறிய கிரகத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று கண்டுபிடித்து அதற்கு புதன் என்று பெயரிட்டார்கள். எப்படி?  அதனால் தான் ஒரு பழமொழியே உண்டு: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று. நாம அப்படியே புதன் கிழமைக்கு அதை மாற்றி விட்டோம்.
    
பொதுவாக  சனி கிரகத்திலிருந்து வரக்கூடிய கதிர் வீச்சுக்கள் மட்டும் நீலம் மற்றும் கருமை நிறம் உடையதாக இருக்கிறது என்று மேலை நாட்டு அறிஞர்கள் சமீபத்தில் கண்டறிந்தார்கள். புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள சித்தன்னவாசல் குகை ஓவியத்தில் தமிழர் (சமணர்கள்), பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனிக்கு கருப்பு வண்ணம் கொடுத்துள்ளனர் அதற்கு ஒரு வளையத்தையும் இட்டுள்ளனர் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘புலிப்பாணி’ தமது பாடலில் சனி ஒரு பனிக்கிரகம் எனப் பாடியுள்ளாரே.

 வியாழன் கிரகத்திற்கு அடுத்து மிகப்பெரிய கிரகமான சனி கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியை பாதிக்கும் என்றும், அதன் பாதிப்பு பூமிக்கு அருகில் வரும்போதும், மிக நெருங்கி இருக்கும்போதும், மற்றும் சற்று விலக ஆரம்பிக்கும்போதும் என்றும்  27 நட்சத்திரக்கூட்டங்களில் சனி கிரகம் 3 நட்சத்திரக்கூட்டங்களைக் கடக்கும் வரை அந்த பாதிப்பு இருக்கும் என்றும், ஒவ்வொரு நட்ச்சத்திரக்கூட்டத்தையும் சனி கிரகம் கடக்க இரண்டரை வருடங்கள் எடுப்பதால் (3 x இரண்டரை – ஆக ஏழரை வருடங்கள்) என்றும் கண்டுபிடித்து ஏழரை சனி என்று கண்டுபிடித்த தமிழர் அறிவு எங்கே?


 கடக ரேகை முதல் மகர ரேகை வரை பூமியின் மேல் சூரியனின் ஒளி படும் வகையில் பூமியின் சுழற்சி உள்ளது என்று கண்டுபிடித்து கடக ரேகை வரை சூரியப்பயணம் போனதும் திரும்புதல் என்று தமிழர்கள் சொன்னதைத்தானே Tropic of Cancer மற்றும் Tropic of Capricorn என்று மேற்கத்தியம் பெயர் மாற்றி இருக்கிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies