கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.
முருங்கைக் கீரை - இதில் முக்கியமாக வைட்டமின் A, வைட்டமின் C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் உள்ள அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும்.