BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 3 October 2014

உத்தரப் பிரதேசத்தில் இஞ்சின் இல்லாமல் பின்புறமாக சென்ற இரயில் - பயணிகள் அதிர்ச்சி !!



உத்தர பிரதேசத்தில் விந்தியாசல் இரயில் நிலையத்தில் விந்தியாச்சல் இண்டர்சிட்டி எஸ்பிரஸ் மதியம் 2.25 மணிக்கு இரயில் நிலையம் வந்தது . அந்த இரயில் அந்த நிலையத்தில் இருக்கும் போது இரயில்வே அதிகாரிகள் இஞ்சினை கழற்றி பின்னே அடுத்த பக்கத்தில் மாட்டுவதற்கு இஞ்சினை கழற்றினார்கள் .

ஆனால் இரயில் பாதை கொஞ்சம் சரிவாக இருந்ததால் இஞ்சின் இல்லாத அந்த 20 கோச்சுகள் பின்நோக்கி செல்ல தொடங்கியது . இஞ்சின் மாட்டுவதற்குள் இரயில் தானாக பின் நோக்கி சென்றதால் இரயில்வே அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர் .

இதனை எதிர்பார்க்காத பயணிகள் பயத்தில் இரயிலின் உள்ளே இருந்து வெளியே குதித்தனர் . பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . இரயில் ஒரு கிலோமீட்டர் சென்ற பின்னர் தானாக நின்றது . இது தொடர்பாக நடந்த முதல் கட்ட விசாரணையில் அதிகாரிகள் அழுத்த பிரேக்கை போட மறந்ததால் இரயில் நகர்ந்ததாக தெரிவித்தனர் . இந்த நிகழ்வு தொடர்பாக சரியான விசாரணை நடத்தப்பட்டு , அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் .

பயணி ஒருவர் தெரிவிக்கையில் , " பிளாட்பாரத்தில் இருந்த சிலர் இரயில் நகருவதைக் கண்ட அதை பிடிப்பதற்காக ஓடினர் " என்றார் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies