மைக்ரோசாப்ட் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளது . தனது மெசஞ்சர் டிவிட்டர் கணக்கினை பேஸ்புக்கிற்கு கொடுத்துவிட முடிவு செய்துள்ளது .
பேஸ்புக் மெசஞ்சர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே . அந்த மெசஞ்சருக்கு என்று தனி டிவிட்டர் கணக்கு இல்லை . ஏனென்றால் @messanger என்னும் கணக்கினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எம்.எஸ்.என் மெசஞ்சர் என்பதற்காக பயன்படுத்தியது .
இப்போது இந்த எம்.எஸ்.என் மெசஞ்சரை மைக்ரோசாப்ட் நிறுவனம் மூட உள்ளதால் இந்த கணக்கினை பேஸ்புக்கிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது . இதனை தங்கள் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் .